ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்களைக் கழிவறையில் ரகசிய கேமரா வைத்து ஆபாசமாக வீடியோ எடுத்த சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தின பாதுகாப்பு பணிக்காகப் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெண் போலீசார் வந்திருந்த நிலையில், மணி நகர் சோதனைச் சாவடியில் உள்ள கழிவறையில் கருப்பு நிறப் கவரால் சுற்றப்பட்ட செல்போன் ஒன்று வீடியோ பதிவுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைப் பார்த்த பெண் காவலர் அதிர்ச்சியடைந்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
முதற்கட்ட விசாரணையில், அந்த செல்போன் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முத்துப்பாண்டி (58) என்பவருடையது என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை உடனடியாகக் கைது செய்தனர். முத்துப்பாண்டி ஏற்கனவே கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சக பெண் போலீசாருக்குக் கேக் ஊட்டிய சர்ச்சையில் சிக்கி இடமாற்றம் செய்யப்பட்டவர் என்பதும், தற்போது மீண்டும் இது போன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டு கைதாகி இருப்பதும் காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைமையில் சென்னையில்…
தமிழக அரசியலில் கட்சி தாவும் படலங்கள் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களை சந்தித்து வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து முன்னாள்…
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து முற்றிலும் விலகி 'வீ தி லீடர்'…
தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்புகள் உச்சக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள்…
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் மற்றும் அதிருப்தி காரணமாக, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாற்று முகாமிற்கு நகரத் தொடங்கியுள்ளனர்.…
தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் அரசியல் திருப்பமாக, திமுகவின் அடிமட்டத் தூண்களாகக் கருதப்படும் ஒன்றியச் செயலாளர்கள்…