புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, அம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கட்ராமன், குளிப்பதற்காகத் தண்ணீர் எடுப்பதற்காக வீட்டின் முன்பகுதியில் இருந்த குடிநீர் தொட்டியின் மூடியைத் திறந்துள்ளார். அப்போது, தொட்டிக்குள் விஷத்தன்மை மிகுந்த கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று அமைதியாக நீந்திக் கொண்டிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியில் அலறியுள்ளார்.
ஈரப்பதம் மற்றும் நீரைத் தேடி பாம்புகள் வருவது வழக்கம் என்றாலும், குடிநீர் தொட்டிக்குள் பாம்பு வந்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர். தொட்டிக்குள் பாம்பு இருப்பதை அறிந்து, உடனடியாக ஊராட்சி அலுவலர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊழியர்கள், சுருக்கு கயிறு பயன்படுத்தி மிக லாவகமாகப் பாம்பைத் தொட்டிக்குள் இருந்து வெளியே எடுத்து, அருகில் இருந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாகக் கொண்டு சென்றுவிட்டனர். குடிநீர் தொட்டிக்குள் விஷப் பாம்பு கண்டறியப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…