விவாகரத்து மட்டும் போதும்…! “என் மாமியார் கொடுத்த தங்க வளையலை…” விவகாரத்து வழக்கில் பெண்ணின் நெகிழ்ச்சியான சம்பவம்…!!

Spread the love

உச்ச நீதிமன்றத்தில் விவாகரத்து தொடர்பான ஒரு அரிதான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகளை நெகிழ வைத்த சம்பவம் நிகழ்ந்தது. கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதியின் விவாகரத்து வழக்கு, நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, கேவி விஸ்வநாதன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கில் ஆஜரான பெண் தரப்பு வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் கணவரிடம் இருந்து ஜீவனாம்சமோ அல்லது பண இழப்பீடோ எதுவுமே கேட்கவில்லை என்றும், விவாகரத்து வழங்கினால் போதும் என்றும் தெரிவித்தார். மேலும், காணொலி காட்சி மூலம் ஆஜரான அந்தப் பெண், திருமணத்தின்போது தனது மாமியார் பரிசளித்த தங்க வளையலை அவரிடமே ஒப்படைக்க விரும்புவதாகவும் கூறினார்.

இந்த வளையல் கணவரின் தாய்க்குச் சொந்தமானது என்பதால், அதனைத் திரும்பக் கொடுக்க விரும்புவதாக அவர் விளக்கம் அளித்தார். பொதுவாக விவாகரத்து வழக்குகளில் பெண்கள் ஜீவனாம்சம் அல்லது இழப்பீடு கேட்பது வழக்கம் என்ற நிலையில், இந்த நேர்மையான கோரிக்கையை கேட்ட நீதிபதிகள் நெகிழ்ந்து போயினர்.

“இதுவரை நாங்கள் சந்தித்த அரிய வழக்குகளில் இதுவும் ஒன்று. உங்களின் நல்ல பண்பை நாங்கள் பாராட்டுகிறோம். கடந்த காலத்தை மறந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழுங்கள்” என்று அந்தப் பெண்ணுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142-ன் கீழ், உடனடியாக அவர்களின் திருமணத்தை ரத்து செய்து விவாகரத்து வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Devi Ramu

Recent Posts

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

12 minutes ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

19 minutes ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

26 minutes ago

அடச்சீ… இன்சூரன்ஸ் ரூ.44 லட்சத்திற்கு ஆசைப்பட்டு… மனைவியை காரை ஏற்றி கொன்ற கணவன்… உ . பி -யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், 32 வயதான ரீட்டா என்ற பெண் சாலை விபத்தில் உயிரிழந்தது போல் சித்தரிக்கப்பட்டு…

34 minutes ago

பகீர்… “சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் சடலம்”… போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?…

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து…

46 minutes ago