திண்டுக்கல் – கரூர் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே தற்காலிகமாகத் தங்கியிருக்கும் நாடோடி தம்பதியினர் கருத்தம்மா மற்றும் அர்ஜூன். இவர்கள் ஊர் ஊராகச் சென்று உறுமியடித்தும், சாட்டையால் தங்களைத் தாங்களே அடித்துக் கொண்டும் அதன் மூலம் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு நிரந்தர வீடு கிடையாது.
ஒரு வருடத்திற்கு முன்பு அர்ஜூனைத் திருமணம் செய்து கொண்ட கருத்தம்மா, தற்போது நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார். நாடோடி சமூகத்தில் இதுவரையிலும் யாருக்கும் வளைகாப்பு நடத்தியிராத சூழலில், தனக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என்ற ஏக்கம் கருத்தம்மாவுக்கு இருந்தது.
இந்நிலையில், பெண்கள் தலைமையிலான தனியார் தன்னார்வ அமைப்பு ஒன்று கருத்தம்மாளின் ஆசையை நிறைவேற்ற முன்வந்தது. திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் கூடத்தில், சிகை அலங்காரம், புத்தாடை, சந்தனம், குங்குமம், வளையல்கள் மற்றும் 9 வகையான சாதங்களுடன் பாரம்பரிய முறைப்படி தடபுடலாக வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.
தனது ஆசையை நிறைவேற்றிய தன்னார்வ அமைப்பினருக்குக் கண்கலங்கியபடி நன்றி தெரிவித்தார் கருத்தம்மா. இந்த மனிதநேயமிக்க நிகழ்வில் நாடோடி கூட்டத்தைச் சேர்ந்த பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்று கருத்தம்மாளை வாழ்த்தினர். நாடோடி பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பலரின் வாழ்த்துக்களைப் பெற்று வருகிறது.
சென்னை கண்ணகி நகர் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் உணவகத்தில், வழக்கம் போல் ஊழியர்கள் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.…
சிவகாசி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற கீர்த்தனா, தனது தேர்தல் அனுபவங்கள் மற்றும் சவால்கள்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் எந்தவொரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் ‘தொங்கு…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி…
தமிழக பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த மாணவர் அபினேஷ் 600-க்கு 598 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில்…
காதல் விவகாரத்தில் சக பெண் காவலரை ஏமாற்றிய ஆண் காவலரின் செயலால், மனமுடைந்த அந்தப் பெண் காவலர் தற்கொலை முயற்சி…