“தலைவர் முடிவே இறுதியானது..” நேற்று அப்படி, இன்று இப்படி..! டி.கே.எஸ். இளங்கோவனின் திடீர் யூ-டர்ன்..! பின்னணி என்ன..?

Spread the love

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களைப் பெற முடியாமல் தவித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் சில கட்சிகளின் ஆதரவுடன் தவெக கூட்டணியின் பலம் 113 ஆக உயர்ந்துள்ள நிலையில், மீதமுள்ள 5 இடங்களுக்காக விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இத்தகைய அரசியல் சூழலில், அதிமுக ஆட்சி அமைக்க திமுக வெளியிலிருந்து ஆதரவு அளிக்கப் போவதாகச் செய்திகள் பரவின. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இது குறித்துத் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், திமுக மற்றும் அதிமுக இடையே கூட்டணி அமையுமா என்ற கேள்வி பரவலாக எழுந்தது.

இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் நீண்டகாலமாகப் பிரதான எதிரிகளாகச் செயல்பட்டு வருவதால், இவர்களுக்கு இடையே கூட்டணி அமையச் சாத்தியமே இல்லை என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். நேற்று “தலைவர் முடிவுக்குக் கட்டுப்படுவோம்” என்று கூறியிருந்த நிலையில், இன்று அவர் வெளியிட்டுள்ள இந்த அதிரடி கருத்து அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

கண்ணகி நகரில் பயங்கரம்..! ஹோட்டலில் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.. 6 பேர் படுகாயம்…!

சென்னை கண்ணகி நகர் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் உணவகத்தில், வழக்கம் போல் ஊழியர்கள் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.…

18 minutes ago

விஜய் கொடுத்த வாய்ப்பு…! பெண் என்பதால் வீட்டிலேயே எதிர்ப்பு.. விமர்சனங்களை உடைத்து எம்.எல்.ஏ-வாக மாறிய கீர்த்தனாவின் வெற்றிக் கதை…!

சிவகாசி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற கீர்த்தனா, தனது தேர்தல் அனுபவங்கள் மற்றும் சவால்கள்…

26 minutes ago

விஜய்யா..? ஸ்டாலினா..? தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அந்த 3 கட்சிகள்…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் எந்தவொரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் ‘தொங்கு…

37 minutes ago

600-க்கு 598..! பெரும்பாக்கம் மாணவர் அபினேஷ் படைத்த பிரம்மாண்ட சாதனை.. தமிழகமே கொண்டாடும் வெற்றி…!

தமிழக பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த மாணவர் அபினேஷ் 600-க்கு 598 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில்…

1 மணத்தியாலம் ago

காவல்துறையிலேயே இப்படியா..? காதலியை கைவிட்டு வேறு பெண்ணை மணந்த போலீஸ்.. பெண் காவலர் எடுத்த அதிரடி முடிவு…!!

காதல் விவகாரத்தில் சக பெண் காவலரை ஏமாற்றிய ஆண் காவலரின் செயலால், மனமுடைந்த அந்தப் பெண் காவலர் தற்கொலை முயற்சி…

1 மணத்தியாலம் ago

ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா..? நாளைக்கு ஒரு நாள் மட்டும் தான் டைம்.. மிஸ் பண்ணிடாதீங்க..! அரசின் அதிரடி அறிவிப்பு…!

சென்னையில் உள்ள அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டை (PHH) வைத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பைத் தமிழக…

1 மணத்தியாலம் ago