விஜய்யா..? ஸ்டாலினா..? தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அந்த 3 கட்சிகள்…!

Spread the love

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் எந்தவொரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் ‘தொங்கு சட்டசபை’  உருவாகியுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்க இன்னும் சில இடங்கள் தேவைப்படுகின்றன. இதனால், தமிழகத்தில் அடுத்த ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக சிறிய கட்சிகள் உருவெடுத்துள்ளன.

தற்போதைய சூழலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  ஆகிய மூன்று கட்சிகளும் மிக முக்கியமான நிலையை எட்டியுள்ளன. இந்த மூன்று கட்சிகளும் ஒருமித்த முடிவை எடுத்து ஏதாவது ஒரு பக்கம் சாய்ந்தால் மட்டுமே தமிழகத்தில் புதிய அரசு அமைய முடியும். தவெக மற்றும் திமுக ஆகிய இரு தரப்புமே இந்த இடதுசாரி மற்றும் தலித் அமைப்புகளின் ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

குறிப்பாக, தவெக தலைவர் விஜய், ஆட்சி அதிகாரத்தில் பங்கு (பகிர்வு) அளிக்கத் தயார் என்று தேர்தல் களத்திலேயே அறிவித்திருந்தது இக்கட்சிகளுக்குச் சாதகமான அம்சமாகக் கருதப்படுகிறது. இதனால் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக-விற்கு ஆதரவு அளிக்குமா அல்லது தங்கள் பழைய கூட்டணியான திமுக-வுக்கே விசுவாசமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த மூன்று கட்சிகளின் கைகளில்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது அடங்கியுள்ளது.

Swetha

Recent Posts

தவெக-வில் திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி..? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தமிழக அரசியலில் தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் (CPI மற்றும் CPI-M) தங்களது ஆதரவை உறுதி செய்துள்ளன. இதற்கான…

7 minutes ago

சற்றுமுன் அதிரடி..! தவெக ஆட்சிக்கு சிபிஐ நிபந்தனையற்ற ஆதரவு..114-ஆக உயர்ந்தது பலம்..!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)…

10 minutes ago

“விஜய் சிஎம் ஆகலனா எல்லோரையும் கொன்றுவேன்..!” தவெக அலுவலகம் முன் கத்தியுடன் தொண்டர் செய்த அதிரடி ரகளை…!

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகம் முன்பாக, அக்கட்சியின் தொண்டர் ஒருவர் கத்தியுடன் தற்கொலை மிரட்டல்…

24 minutes ago

தவெக-வுக்கு ஆதரவா..? திமுக-வுக்கு விசுவாசமா..? – விசிக முன்வைக்கும் கேள்விகள்..! பின்னணி என்ன..?

தவெகவுக்கு மேலும் 5 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில் தமிழக கட்சியின் தலைவர் விஜய் விசிக, விடுதலை சிறுத்தை கட்சி மற்றும்…

40 minutes ago

கண்ணகி நகரில் பயங்கரம்..! ஹோட்டலில் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.. 6 பேர் படுகாயம்…!

சென்னை கண்ணகி நகர் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் உணவகத்தில், வழக்கம் போல் ஊழியர்கள் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.…

60 minutes ago

விஜய் கொடுத்த வாய்ப்பு…! பெண் என்பதால் வீட்டிலேயே எதிர்ப்பு.. விமர்சனங்களை உடைத்து எம்.எல்.ஏ-வாக மாறிய கீர்த்தனாவின் வெற்றிக் கதை…!

சிவகாசி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற கீர்த்தனா, தனது தேர்தல் அனுபவங்கள் மற்றும் சவால்கள்…

1 மணத்தியாலம் ago