சிவகாசி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற கீர்த்தனா, தனது தேர்தல் அனுபவங்கள் மற்றும் சவால்கள் குறித்துப் பகிர்ந்துள்ளார். 29 வயதான அவர், 68,709 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 11,670 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். சாதாரணப் பின்னணியில் இருந்து வந்த தனக்கு, அரசியல் களத்தில் வாய்ப்பளித்த விஜய் அண்ணாவிற்குத் தனது நன்றியை உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
அரசியல் ஆலோசகராக ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் இருந்தாலும், பெண் என்பதால் அரசியலுக்குச் செல்வதில் தனது வீட்டிலேயே கட்டுப்பாடுகள் இருந்ததாகக் கீர்த்தனா குறிப்பிட்டுள்ளார். தவெக வேட்பாளராக நின்றபோது பலர் சமூக வலைதளங்களில் விமர்சித்ததாகவும், “அனில்” போன்ற பெயர்களால் கிண்டல் செய்ததாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால், எதற்கும் பதில் சொல்லாமல் மக்களின் குறைகளைக் கேட்டறிந்ததே தனது வெற்றிக்குக் காரணம் என்று அவர் கூறினார்.
பிரச்சாரத்தின்போது தான் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள் குறித்துப் பேசிய அவர், சாட்சியாபுரம் பகுதியில் பிரச்சாரம் செய்தபோது அதிமுக மற்றும் பாஜகவினர் தங்களை விரட்டியதாகவும், வாக்களிக்கச் சென்றவர்களின் கைகளைப் பிடித்து இழுத்ததாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். சிவகாசியில் உள்ள பெரும் முதலாளிகளிடம் மட்டும் வாக்கு கேட்காமல், அடித்தட்டு மக்களின் குடிநீர் மற்றும் சாலை வசதி போன்ற அடிப்படைத் தேவைகளைக் கேட்டறிந்து செயல்பட்டதால் மக்கள் தனக்கு ஆதரவு அளித்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் (CPI மற்றும் CPI-M) தங்களது ஆதரவை உறுதி செய்துள்ளன. இதற்கான…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)…
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகம் முன்பாக, அக்கட்சியின் தொண்டர் ஒருவர் கத்தியுடன் தற்கொலை மிரட்டல்…
தவெகவுக்கு மேலும் 5 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில் தமிழக கட்சியின் தலைவர் விஜய் விசிக, விடுதலை சிறுத்தை கட்சி மற்றும்…
சென்னை கண்ணகி நகர் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் உணவகத்தில், வழக்கம் போல் ஊழியர்கள் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் எந்தவொரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் ‘தொங்கு…