அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சியாட்டல் நகரில் உள்ள லூமென் ஃபீல்ட் மைதானத்தில் சியாட்டல் சீஹாக்ஸ் மற்றும் சிக்காகோ பியர்ஸ் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி கடந்த நவம்பர் 2-ஆம் தேதி நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்பு அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 4 பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் மைதானத்திற்கு மேல் பறக்கும் சாகசம் திட்டமிடப்பட்டிருந்தது. தேசிய கீதம் ஒலிக்கப்பட்டபோது ஹெலிகாப்டர்கள் பறந்தன.
ஆனால், இறுதி ஹெலிகாப்டர் மைதானத்தை விட்டு முழுமையாகக் கடப்பதற்கு முன்பே, அங்கு திட்டமிடப்பட்டிருந்த பட்டாசு வெடிக்கும் நிகழ்ச்சி அவசரமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் வானில் பறந்து கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டருக்கு மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. மைதானத்தில் இருந்த சுமார் 70,000 ரசிகர்கள் இந்த ஆபத்தான காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். எனினும், அதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டருக்கு எந்தவித சேதமும் ஏற்படாமல் பாதுகாப்பாக வெளியேறியது. பட்டாசு வெடிக்கும் நேரமும் வான்வழி சாகச சரியாக ஒருங்கிணைக்கப்படாததே இந்த விபத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…
கார்ப்பரேட் அலுவலகத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக வெளிநாட்டுப் பெண் அதிபர் முன்னிலையில் பெண் ஊழியர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிய…
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…
சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…