விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு – பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா கடந்த அக்டோபர் 11 அன்று நள்ளிரவில் மர்மமான முறையில் காணாமல் போனார். பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு உறங்கிய குழந்தை மாயமான இந்தச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில், தற்போது வழக்கு விசாரணை முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது.
உள்ளூர் போலீசார் 10 நாட்களில் எந்தத் துப்பும் கண்டுபிடிக்காததால் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட இவ்வழக்கில், பழைய குற்றவாளிகள், சாமியார்கள், சுடுகாடுகள் மற்றும் 14 நேஷனல் பெர்மிட் லாரிகள் எனப் பல கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மேலும், நாமக்கல் மற்றும் கடலூர் உளவுத்துறை (OCIU, SBCID) களமிறக்கப்பட்டு தேடுதல் வேட்டை சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், குழந்தை மாயமான அதே நள்ளிரவு நேரத்தில் சிறுமியின் வீட்டின் முன்பாகச் சென்ற வாகனங்கள் மற்றும் செல்போன் கோபுர சிக்னல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, நள்ளிரவு சுமார் 12:45 மணியளவில் அந்த மண் சாலை வழியாக டாடா ஏஸ் மினி வேன் மற்றும் சில இருசக்கர வாகனங்கள் சென்றது சிசிடிவி பதிவுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அவை பக்கத்து கிராமமான நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வில்லுப்பாட்டு கலைஞர்களின் வாகனங்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. திருக்கோவிலூர் மற்றும் கண்டாச்சிபுரம் சுற்றுவட்டாரக் கோவில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, தங்களது இசைக்கருவிகளுடன் ஊர் திரும்பிய இவர்களின் நேரம், சிறுமி மாயமான நேரமான நள்ளிரவு 12 மணி முதல் 1 மணி வரையிலான காலத்துடன் சரியாகப் பொருந்திவந்துள்ளது.
இதையடுத்து, கூடுதல் எஸ்பி வேல்முருகன் தலைமையிலான சிபிசிஐடி அதிகாரிகள் நடுப்பட்டு வில்லுப்பாட்டுக் குழுவினரை நேரில் வரவழைத்துத் தீவிர விசாரணை நடத்தினர். நள்ளிரவு 12:45 மணிக்கு அந்தச் சாலையைக் கடக்கும்போது வீட்டின் முன்பாக வேனை நிறுத்தினார்களா, சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரேனும் நின்றார்களா, அல்லது வீட்டின் கதவு திறந்திருந்ததா என்பது குறித்துக் கலைஞர்களிடம் தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டது.
இந்த நள்ளிரவு மர்மத்தை உடைக்கக் கலைஞர்களின் வாக்குமூலம் மிக முக்கியச் சாட்சியாகக் கருதப்படுகின்றது. இந்தத் தகவல்கள் நள்ளிரவில் சிறுமியின் வீட்டில் உண்மையில் என்ன நடந்தது என்பதைத் துல்லியமாகக் கட்டமைக்கப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுவதால், இவ்வழக்கில் விரைவில் ஒரு தெளிவான தீர்வு கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…
அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…
உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…
தமிழகத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய முதல் தகவல் அறிக்கையின்…
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…