ரூ.4,730 கோடி ஆற்று மணல் கொள்ளை…. விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு… சிக்கிய முக்கிய ஆவணங்கள்…. தமிழகத்தையே உலுக்கும் புதிய எஃப்.ஐ.ஆர்…!

Spread the love

தமிழகத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய முதல் தகவல் அறிக்கையின் (எஃப்.ஐ.ஆர்) அடிப்படையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (டி.வி.ஏ.சி) அதிகாரிகள் இன்று காலை முதலே அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அமலாக்கத்துறை மற்றும் அறப்போர் இயக்கம் அளித்த புகார்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் விரிவான முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு, தற்போதும் இந்த அதிரடி நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள 28 மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட சுமார் 30 மடங்கு வரை கூடுதலாக, அதாவது 23 லட்சம் யூனிட் ஆற்று மணல் சட்டவிரோதமாகக் கொள்ளையடிக்கப்பட்டதை அமலாக்கத்துறை கண்டறிந்திருந்தது. இதன் மூலம் சுமார் ரூ.4,730 கோடி அளவிற்கு பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, 2024 ஜூன் மாதத்தில் அமலாக்கத்துறை சார்பில் தமிழகக் காவல் துறைத் தலைமை இயக்குநருக்கு (டி.ஜி.பி) விரிவான அறிக்கை அனுப்பப்பட்டது. இதனிடையே, இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி கூடுதல் ஆதாரங்களுடன் ‘அறப்போர் இயக்கம்’ சார்பிலும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

இந்த ஊழல் குற்றச்சாட்டுகளின் பின்னணியில், திண்டுக்கல், திருச்சி, கரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள முக்கிய புள்ளிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை தீவிர சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபரும் ஜி.டி.என். கலைக்கல்லூரி நிறுவனருமான ரத்தினம் என்பவரது இடங்களிலும், திருச்சியில் பொதுப்பணித்துறை அலுவலர் குடியிருப்பு உள்ளிட்ட 3 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, கரூரில் நீர்வளத் துறை உதவி பொறியாளர் சுகுமார் வீட்டிலும் சோதனைகள் தொடர்கின்றன.

மேலும், புதுக்கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எம்.ஆர்.எம். குமாரராஜா குவாரி, முத்துப்பட்டினத்தில் உள்ள மணல் ஒப்பந்ததாரர் எஸ். ராமச்சந்திரன் வீடு, ஏம்பலில் உள்ள குமாரராஜா வீடு மற்றும் கரம்பக்குடியில் உள்ள ஒப்பந்ததாரர் கரிகாலன் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு டி.எஸ்.பி-க்கள் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறைக் குழுவினர் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த காலத்தில் நீர்வளத் துறை அதிகாரிகளுடனும் அரசு ஊழியர்களுடனும் இணைந்து ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் உள்ளிட்டோர் இந்த மாபெரும் முறைகேட்டை அரங்கேற்றியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த முறைகேடு காரணமாகத் தமிழக அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதோடு, ஆற்றுப்படுகைகளில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்பட்டதால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகளும் நிலத்தடி நீர்மட்டச் சரிவும் ஏற்பட்டுள்ளதாகப் புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் சோதனைகளின் போது கைப்பற்றப்படும் முக்கிய ஆவணங்கள் மற்றும் சான்றுகளின் அடிப்படையில், அடுத்தகட்ட கைது நடவடிக்கைகள் பாயலாம் என்பதால் இச்சம்பவம் தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

4 minutes ago

என் பொண்ணு கூட இருக்கியாடா?… மகளின் காதலனை கதறக் கதற அடித்துக் கொன்ற தந்தை… பெங்களூரில் அரங்கேறிய கோரச் சம்பவம்…!!

பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…

25 minutes ago

ஐயோ கொடுமையே… GST பில் கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல்… பேக்கரி உரிமையாளரை அடித்து நொறுக்கி… JDS நிர்வாகிகள் வெறியாட்டம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…

35 minutes ago

என்னது… இறந்தவர்கள் சாம்பலை சூப்பில் கலந்து குடிக்கிறார்களா?… அதிர்ச்சியூட்டும் பழங்குடியினர்களின் விசித்திர செயல்… இதன் பின்னணி என்ன?…

தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…

44 minutes ago

அடச்சீ… 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த… வேன் ஓட்டுநர் போக்சோவில் கைது… பள்ளியில் நேர்ந்த கொடூரம்…!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…

52 minutes ago