ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா பேகம் (24) என்பவரைக் காதலித்து நீதிமன்றம் மூலம் திருமணம் செய்து கொண்டுள்ளார். 3 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில், தனது மனைவி சிந்தூர் அணிந்திருந்த புகைப்படத்தை அகில் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த மனைவியின் வீட்டார் மற்றும் கிராமத்தினர் அகிலை இஸ்லாம் மதத்திற்கு மாறுமாறு வற்புறுத்தத் தொடங்கியுள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக மனைவி சொந்த ஊருக்குச் சென்ற நிலையில், பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக்கூறி மாமியார் நூர் காதுன் (36) அகிலை அசாமுக்கு வரவழைத்துள்ளார். அங்கு ஜலுக்பாரி பகுதியில் காரில் ஏற்றிச் சென்று, தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று அகிலுக்குப் போதைப்பொருளைக் கொடுத்துள்ளனர். மயங்கிய நிலையில் இருந்த அவருக்குக் காருக்குள்ளேயே விருப்பத்திற்கு மாறாகச் சுன்னத் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாட்டிறைச்சியைச் சாப்பிடுமாறும், பெயரை மாற்றி இஸ்லாமுக்கு மாறாவிட்டால் ஆபத்து என்றும் மிரட்டியுள்ளனர். கடந்த 2 மாதங்களாக இந்தச் சித்திரவதை அதிகரித்ததால், அகில் அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள பங்காகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மாமியார் நூர் காதுனைக் கைது செய்தனர். பெங்களூருவில் இருக்கும் மனைவி நூர்ஷிகா பேகத்திடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில், உடல்நலம் குன்றிய கணவரை விட்டுவிட்டு, 50 வயது பெண் ஒருவர் தனது சொந்த…
பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…