தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மனைவியின் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில், இருவரையும் சமாதானம் செய்யச் சென்ற நண்பர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே ஜக்கசமுத்திரம் கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்த சித்தேஸ்வரன் (27) என்பவரின் மனைவி மகேஸ்வரிக்கும், அவரது பக்கத்து ஊரைச் சேர்ந்த நண்பர் சூர்யா (25) என்பவருக்கும் பள்ளிப் பருவத்திலிருந்தே காதல் இருந்து வந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகும் இருவரும் செல்போனில் பேசி வந்ததை சித்தேஸ்வரனின் மற்றொரு நண்பரான குணசேகரன் (25) ஆடியோ ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் சூர்யாவுக்கு நண்பர்கள் மீது ஆத்திரம் இருந்துள்ளது.
இந்நிலையில் சி.எம்.புதூர் பகுதியில் சித்தேஸ்வரன், சூர்யா, குணசேகரன் மற்றும் திருமூர்த்தி ஆகியோர் ஒன்றாக மது அருந்தியபோது, திட்டமிட்டு கத்தியை மறைத்து வந்திருந்த சூர்யா சித்தேஸ்வரனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சூர்யா கத்தியை எடுத்துச் சித்தேஸ்வரனைக் குத்த முயன்றபோது, இடையே புகுந்து தடுக்க முயன்ற நண்பர் குணசேகரனுக்குக் கத்திக்குத்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு நண்பர் திருமூர்த்தி காயமடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக மாரண்டஅள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், கொலையாளி சூர்யா பாலக்கோடு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…
சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…
கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…