தமிழகம் முழுவதும் சுமார் 36,000 நியாயவிலை கடை செயல்பட்டு வரும் நிலையில் 2 கோடி 27 லட்சம் ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த ரேஷன் அட்டைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலமாக குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகப்பு மற்றும் நிவாரணம் என ஏராளமான உதவிகள் ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு மட்டும் கிடைக்கின்றன. இதனிடையே ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களுக்காக அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய நிலை உள்ளது.
இந்த சிரமத்தை குறைப்பதற்காக தமிழக அரசு பொது மக்களுக்கு உதவும் வகையில் ஒரு சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி டிசம்பர் 13 இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை பொது விநியோகத் திட்டத்தின் பலன்கள் மக்களை எளிதில் சென்றடையும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் பிரதி மாதம் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும். இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் அல்லது நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் மற்றும் தொலைபேசி எண் மாற்றம் செய்தல் ஆகிய சேவைகளை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் (CPI மற்றும் CPI-M) தங்களது ஆதரவை உறுதி செய்துள்ளன. இதற்கான…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)…
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகம் முன்பாக, அக்கட்சியின் தொண்டர் ஒருவர் கத்தியுடன் தற்கொலை மிரட்டல்…
தவெகவுக்கு மேலும் 5 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில் தமிழக கட்சியின் தலைவர் விஜய் விசிக, விடுதலை சிறுத்தை கட்சி மற்றும்…
சென்னை கண்ணகி நகர் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் உணவகத்தில், வழக்கம் போல் ஊழியர்கள் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.…
சிவகாசி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற கீர்த்தனா, தனது தேர்தல் அனுபவங்கள் மற்றும் சவால்கள்…