காதல் திருமணம் செய்த பேரன்… “என் பொண்டாட்டிய பாத்துக்கோங்க தாத்தா..”மருமகளை துடிதுடிக்க வெட்டிக்கொன்ற மாமனார்… திருப்பத்தூரில் அரேங்கேறிய பயங்கர சம்பவம் …!!

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடும்பத் தகராறில் மருமகளை மாமனாரே வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலூர் கிராமத்தைச் சேர்ந்த அபிமன்யு என்பவர், சென்னையில் பணியாற்றியபோது மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பிரதீபா என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்திற்கு அபிமன்யுவின் தந்தை முனியன் மற்றும் அவரது மூன்றாவது மனைவி கவிதா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் குடும்பத்திற்குள் அடிக்கடி மோதல்கள் வெடித்த நிலையில், இது தொடர்பாக உமராபாத் காவல் நிலையத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.

தற்போது நுங்கு வியாபாரம் செய்து வரும் அபிமன்யு, பணி நிமித்தமாக வெளியூர் செல்ல நேரிட்டதால், தனது மனைவி பிரதீபாவிற்கு பாதுகாப்பாக இருக்குமாறு தனது தாத்தா சாமுண்டியிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று இரவு கவிதா மீண்டும் பிரதீபாவிடம் சாதி ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கு வந்த சாமுண்டி தட்டிக்கேட்டும் கவிதா அடங்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முதியவர் சாமுண்டி, தான் வைத்திருந்த நுங்கு வெட்டும் கத்தியால் கவிதாவின் கழுத்தை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கவிதா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனைத் தடுக்க முயன்ற முனியனுக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த உமராபாத் போலீசார், காயமடைந்த முனியன் மற்றும் முதியவர் சாமுண்டி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த கவிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

காதல் திருமணத்தால் ஏற்பட்ட மோதல், ஒரு கொலையில் முடிந்தது பாலூர் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேரனின் மனைவியைக் காக்க நினைத்த தாத்தா, தனது மருமகளையே வெட்டிக்கொலை செய்த விபரீத சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப உறவுகளுக்குள் நிலவிய சாதிப் பாகுபாடும், சகிப்புத்தன்மையற்ற போக்கும் ஒரு உயிரைப் பறித்ததோடு, முதியவர் ஒருவரை கொலையாளியாகவும் மாற்றியுள்ளது வேதனையளிக்கிறது.

Muthu Mani

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

59 minutes ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

1 மணத்தியாலம் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

1 மணத்தியாலம் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

1 மணத்தியாலம் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

1 மணத்தியாலம் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

2 மணத்தியாலங்கள் ago