தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் அமைந்துள்ள அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு பயிற்சி பெறும் மாணவர்களுக்காக ஒரு விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகின்றது. இந்த விடுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தங்கி விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு அருகில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வி பயின்று வருகிறார்கள். இந்நிலையில் அந்த விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவனை அதே விடுதியில் தங்கி இருந்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர், 10, 9 ஆம் வகுப்பு மாணவர்கள் என மொத்தம் நான்கு பேர் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து பல்வேறு வகைகளில் துன்புறுத்தி வந்துள்ளனர்.
மேலும் மாணவனை சிகரெட் புகைக்க கட்டாயப்படுத்தியும் கடுமையாக அச்சுறுத்தியும் அவர்கள் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்தக் கொடுமை நாளுக்கு நாள் தீவிரம் அடைந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த சிறுவன் இறுதியில் தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளான். இதனைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோர் தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேலியன் என்பவரிடம் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நான்கு மாணவர்களும் உடனடியாக விடுதியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 4 மாணவர்களையும் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில் புகாரில் கூறப்பட்ட சம்பவங்கள் அனைத்தும் உண்மை என உறுதி செய்யப்பட்டது. தற்போது நான்கு மாணவர்கள் மீதும் போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…