காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரையில் கடந்த பல வருடங்களாகவே திமுக கூட்டணியில் தான் அங்கம் வகித்து வருகிறது. கலைஞர் முதல்வராக இருந்தபோது சோனியா காந்தியுடன் திமுகவிற்கு நல்ல இணக்கமான உறவு இருந்தது. தற்போது ஸ்டாலின் முதல்வராக இருக்கும் நிலையில் ராகுல் காந்தியும் அந்த இணக்கத்தை பின்பற்றி வருகிறார். மத்தியில் கடந்த மூன்று முறை காங்கிரஸ் தோல்வியை சந்தித்தாலும் தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி என்பதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் 2021 தேர்தலில் திமுக கொடுத்த குறைவான தொகுதிகளை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் 2026 தேர்தலில் அதிக தொகுதிகளை கேட்கும் முடிவில் உள்ளது. ஆனால் திமுக 25 தொகுதிகளுக்கு மேல் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. திமுகவுடன் எத்தனை தொகுதிகள் என்று பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் தலைவர் உட்பட ஐந்து பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைமை நியமித்திருந்தது. சில நாட்களுக்கு முன்பு கூட அந்த ஐந்து பேரும் அறிவாலயம் சென்று முதல்வரை சந்தித்து பேசினர்.
தேர்தல் நெருங்கும் நிலையில் விரைவில் இது குறித்து முழுமையாக பேசி முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. இப்படியான நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை ஸ்டாலினிடம் கறாராக பேசிய அதிக சீட்டுகளை வாங்குவார் என்ற நம்பிக்கை காங்கிரஸ் தலைமைக்கு இல்லை என தெரிகிறது. அவரின் அப்ரோச் மிகவும் சாஃப்ட்டாக இருப்பதால் அவரை தூக்கிவிட்டு தலைவர் பதவியில் வேறு யாரையாவது நியமிக்கலாமா என்று காங்கிரஸ் தலைமை யோசித்து வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…