Connect with us

ASTROLOGY

சிவாலயங்களில் வழிபடும் போது இந்த தப்ப மட்டும் செய்யாதீங்க.. பெரிய பாவம் பிடிக்குமாம்..

இந்து மதத்தில் கடவுள்களுக்கெல்லாம்  மூத்த கடவுளாக ஈசனை நாம் வழிபடுகிறோம். சைவம், வைணவம் ஆகிய இரண்டு மதங்கள் மட்டுமே இருந்த நிலையில் காலப்போக்கில் பல்வேறு மதங்களை மக்கள் பின்பற்றத் தொடங்கினர். இந்து என்ற சொல்லானது சைவம், வைணவம் ஆகிய இரு கடவுள்களையும் சேர்த்துக் குறிப்பதாகவே உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு கடவுளையும் நாம் ஒவ்வொரு விதமாக வழிபடுகிறோம். உதாரணமாக விநாயகரை வணங்கும் போது காதை கையில் பிடித்து உட்கார்ந்து எழுவது.

#image_title

   

தலையில் கைகளை மாற்றி வைத்து குட்டுவது போன்ற வழிபாட்டு முறைகளை பின்பற்றி வருகிறார்கள். அதேபோல் ஈசனை வணங்கும் போது கூடவே சண்டிகேஸ்வரரையும் வணங்கி வருகிறார்கள். மேலும் பெரும்பாலான சிவாலயங்களில் சண்டிகேஸ்வரருக்கு தனி சன்னதி இருக்கும். வைச சமயத்தின் பஞ்ச மூர்த்திகளில் ஒருவராகவும், சிவபெருமானுக்கு படைக்கப்படும் உணவு மற்றும் உடைகளின் அதிபதியாகவும் சண்டிகேஸ்வரர் இருப்பதாக புராணங்கள் கூறுகிறது. இவருடைய சந்நிதி சிவாலயங்களில் சிவபெருமானின் கருவறை அமைந்திருக்கும் பகுதியின் இடப்பாகத்தில் அமைக்கப்படுகிறது.

#image_title

இவரை வழிபடும் போது நாம் செய்யும் ஒரு பெரிய தவறுதான் அவரை வழிபட்டபின் கை தட்டுவது. சண்டிகேஸ்வரருக்கு காது கேட்காது என்று வேறு கூறி வருகிறோம். ஆனால் அது உண்மையில்லை. எனவே அவருக்கு முன் சென்று கை தட்டுவது அவரது தியானத்தை கலைப்பது போன்றது. எனவே இனி சண்டிகேஸ்வரர் முன் கை தட்டாதீர்கள். அவ்வாறு செய்வது பெரும் பாவச் செயலுக்கு ஒப்பாகும். மேலும் சண்டிகேஸ்வரர் ஒரு மிக சிறந்த சிவ பக்தர். அவர் எப்போதும் சிவ சிந்தனையிலே தியானத்தில் இருப்பவர்.

#image_title

சிவனின் சொத்துகளை பாதுகாப்பவர். எனவே சிவ ஆலயங்களை விட்டு செல்லுமுன், சண்டிகேஸ்வரர் முன் சென்று மெதுவாக சத்தம் வராமல் கைகளை துடைத்து, சிவன் கோயில் சொத்து எதையும் நாம் எடுத்து செல்லவில்லை என்பதை சண்டிகேஸ்வரர் தியானம் கலையாமல் சொல்ல வேண்டும். இதுவே முறையாகும். இதனால்தான் சிவாலயங்களில் விபூதி போன்ற பிரசாதங்கள் கொடுத்தால் கூட அங்கேயே விட்டு விடுவது வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர் சிவ பக்தர்கள்.

#image_title

Continue Reading

More in ASTROLOGY

To Top