தமிழகத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் தடையின்றித் தொடர வேண்டுமெனில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனவும், அதற்காக மக்கள் விடுதலை கட்சி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் எனவும் அக்கட்சியின் நிறுவனர் முருகவேல் ராஜன் தெரிவித்துள்ளார். டாக்டர் ராமதாஸால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, வந்தவாசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய இவர், கடந்த 2002-ம் ஆண்டு பாமகவிலிருந்து விலகி மக்கள் விடுதலை கட்சியைத் தொடங்கினார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கைகோர்த்த முருகவேல் ராஜன், நிலக்கோட்டை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நிலவும் அரசியல் சூழலில், தமிழக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து திமுகவின் வெற்றியை உறுதி செய்வதே தமது கட்சியின் இலக்கு என அவர் சூளுரைத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…
அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…
அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…