“அடி எப்படி..?” – ஈரானை நிலைகுலைய வைத்த 900 கிலோ குண்டு… ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி வீடியோ… இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலின் பகீர் பின்னணி…!!!

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோசியல்’ பக்கத்தில் பகிர்ந்துள்ள பெரும் வெடிப்பு தொடர்பான வீடியோ, சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ, ஈரானின் முக்கிய நகரமான இஸ்ஃபஹானில் உள்ள வெடிமருந்து கிடங்கு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலைக் குறிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 23 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்தப் பகுதியில் உள்ள ராணுவ விமானப்படைத் தளம் மற்றும் வெடிமருந்து கிடங்குகளை இலக்கு வைத்து, 907 கிலோ எடையுள்ள ‘பங்கர் பஸ்டர்’ (Bunker Buster) ரக குண்டுகள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்குத் தேவையான செறிவூட்டப்பட்ட யுரேனியம் இஸ்ஃபஹானில் உள்ள நிலத்தடி வசதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ மூலம் இந்த நகரம் இலக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சுமார் 540 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் இங்கு நகர்த்தியிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர். பேச்சுவார்த்தைக்கு ஈரான் உடன்பட மறுத்த சூழலில், அமெரிக்க படைகள் இந்த அதிரடி ராணுவ நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

இந்தத் தாக்குதலுக்கு முன்னதாகவே, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் கார்க் தீவு உள்ளிட்ட பொதுக் கட்டமைப்புகளை முற்றிலும் அழிப்பேன் என்று ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தவறினால் அல்லது முறையான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என அவர் குறிப்பிட்டிருந்தார். அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே, இந்த வெடிப்புச் சம்பவத்தின் வீடியோவை ட்ரம்ப் பகிர்ந்துள்ளதால், மேற்காசியாவில் போர் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

Muthu Mani

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

5 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

5 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

5 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

5 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

5 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

5 மணத்தியாலங்கள் ago