“நகை வேண்டாம்.. பணம் வேண்டாம்…!” உள்ளாடைகளை மட்டும் திருடும் மர்ம நபர்…. கங்காவதியில் பரபரப்பு…!!

Spread the love

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள கங்காவதி நகரில் கடந்த சில நாட்களாக விசித்திரமான திருட்டுச் சம்பவம் அரங்கேறி வருகிறது. அப்பகுதியிலுள்ள சிபிஎஸ் குடியிருப்புப் பகுதியில் நள்ளிரவு நேரங்களில் புகுந்து வரும் ஒரு மர்ம நபர், வீடுகளின் சுற்றுச்சுவர்களைத் தாண்டி குதித்து, துணிக்காயப்போடும் கம்பிகளில் இருக்கும் பெண்களின் உள்ளாடைகளை மட்டும் குறிவைத்துத் திருடிச் செல்கிறார். வீட்டில் இருக்கும் நகை அல்லது பணத்தைப் பொருட்படுத்தாமல், பெண்களின் ஆடைகளை மட்டும் திருடும் இந்த நபரின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த நபர் உள்ளாடைகளைத் திருடும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. இது ஏதேனும் ஒரு சைக்கோ நபரின் வேலையாக இருக்கலாம் என்று அஞ்சும் அப்பகுதிப் பெண்கள், இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவும், துணிகளை வெளியே காயப்போடவும் அச்சப்படுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கங்காவதி நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மர்ம நபரின் இந்த விசித்திரப் பழக்கம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Devi Ramu

Recent Posts

மக்கள் பணத்தை தொட்ட யாரையும் சும்மா விட மாட்டோம்… ஊழல் ஒன்னு ஒன்னா வெளியே வரும்… ஏன்பா பயந்து நடுங்குறீங்க..? சட்டசபையை அதிர வைத்த முதல்வர் விஜய்..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

3 minutes ago

BREAKING: முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

6 minutes ago

சட்டமன்றத்தில் பரபரப்பு…. “டாஸ்மாக்கில் பார்ட்டி ஃபண்ட்” CM விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை… திமுகவினர் கடும் அமளி…!!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றியபோது, டாஸ்மாக்கில்…

10 minutes ago

நம்ம ஆட்சிக்கு நாள் குறிக்குறாங்க… வெள்ளை அறிக்கை வெளியானதில் இருந்தே… CM விஜய் கொடுத்த ஷாக்… ஆடிப்போன எதிர்க்கட்சி..!!

"நம் ஆட்சிக்கு நாள் குறிப்பவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்" என்று முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பேரவையில்…

12 minutes ago

FLASH: “கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் அவ்வளவு வலி, வேதனை” பேரவையில் முதல்வர் விஜய் உருக்கம்..!!

"கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், இந்த 2 ஆண்டுகள் வலியும் வேதனையும் நிறைந்தது. பல்வேறு…

20 minutes ago

“ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விடமாட்டேன்” சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி…!!

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரையில், தமிழகத்தில் 2026 பொதுத்தேர்தலில் யாராலும் உடைக்கவே முடியாது என்று கருதப்பட்ட சாதி மற்றும் மத…

34 minutes ago