எங்கயோ இடிக்குதே!… சதுர அடி வெறும் 4 ரூபாயா?.. சீமான் மனைவி பெயரில் வாங்கப்பட்ட 25 ஏக்கர் நிலம்.. நெட்டிசன்களின் அதிரடி ‘கால்குலேஷன்’…!!!

Spread the love

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2026 சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. தனது பிரமாணப் பத்திரத்தில், தமக்கு 39.8 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், 5 லட்சம் ரூபாய் கடனும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தமக்குச் சொந்தமாக வீடு இல்லை எனக் குறிப்பிட்டுள்ள சீமான், தனது மனைவி கயல்விழி பெயரில் 3.44 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகக் கணக்கு காட்டியுள்ளார்.

சீமானின் சொத்து விவரங்களில் குறிப்பாக நிலம் வாங்கிய விலை தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவரது மனைவி பெயரில் 25.45 ஏக்கர் நிலம், 50.9 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக் கணக்கிட்டுப் பார்த்தால், ஒரு சதுர அடி நிலம் வெறும் 4.59 ரூபாய்க்கு வாங்கப்பட்டதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவ்வளவு குறைவான விலையில் எங்கு நிலம் கிடைக்கிறது எனப் பலரும் கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வழக்குகளைப் பொறுத்தவரை, சீமான் மீது 90-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை அரசியல் போராட்டங்கள், அனுமதியின்றி பேரணி நடத்தியது மற்றும் அவதூறு பேச்சுக்கள் தொடர்பானவை ஆகும். குறிப்பாக, தந்தை பெரியார் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாகச் சேலம் மாவட்டத்தில் மட்டும் நான்கு காவல் நிலையங்களில் அவர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது காரைக்குடி தொகுதியில் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வரும் சீமானின் இந்தச் சொத்து விவரங்கள் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளன.

Muthu Mani

Recent Posts

பல்லாயிரம் கால்கள்.. ஸ்தம்பித்த அமைச்சர்களின் போன்கள்….. CM விஜய் களமிறக்கிய அந்த ‘ரகசிய’ CUG திட்டம்… பதறிய கோட்டை…!

பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…

37 seconds ago

திடீர் திருப்பம்…. “விஜய் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்.. கதறும் 4 மாஜி எம்.எல்.ஏ.க்கள்”… தவெக-வில் பெரும் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…

6 minutes ago

2017 டூ 2026: ‘அந்த’ புண்ணியவான்கள் செய்த தவறு… ஸ்டாலின், எடப்பாடிக்கு நேருக்கு நேர் சவால் விட்ட விஜய்…. சட்டமன்றத்தில் வெடித்த ‘பண்டோரா பாக்ஸ்’…!

தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…

16 minutes ago

“உங்க அப்பாவைக் காணோமே”…. திமுகவினர் இல்லாத அவையில் விஜய் சொன்ன அந்த ‘குட்டிக்கதை’… சட்டசபையில் வெடித்த ‘பார்ட்டி ஃபண்ட்’ சர்ச்சை….!

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…

27 minutes ago

“ஓசி பஸ், 1000 ரூபாய் கேஸ்”…. 2017 முதல் 2026 வரை நடந்ததை வெளுத்து வாங்கிய விஜய்…  சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய  CM…!

தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…

46 minutes ago

“ஆமாம், எங்களுக்கு அது தெரியாது தான்”…. திமுக ஆட்சியின் 8 ஊழல்களை மேஜையைத் தட்டிப் பட்டியலிட்ட முதல்வர் விஜய்…. அனல் பறந்த சட்டமன்ற விவாதம்….!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…

54 minutes ago