Categories: சினிமா

விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்…! பொங்கலுக்கு முன்னாடியே வரும் ‘பராசக்தி’… ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு….! பின்னணி என்ன?

Spread the love

நடிகர் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படமான ‘பராசக்தி’, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. சுதா கொங்கரா இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷின் 100-வது படமாக உருவாகும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் வேண்டுகோளை ஏற்று, இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிரடியாக மாற்றியுள்ளது. அதன்படி, திட்டமிட்ட தேதியை விட நான்கு நாட்களுக்கு முன்பாகவே, அதாவது ஜனவரி 10-ம் தேதியன்றே ‘பராசக்தி’ உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

1960-களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்தைப் பின்னணியாகக் கொண்ட இத்திரைப்படத்தில், சிவகார்த்திகேயனுடன் அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் ரவி மோகன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு அடுத்த நாளே சிவகார்த்திகேயனின் படம் வெளியாவது பாக்ஸ் ஆபீஸில் பெரும் போட்டியை உருவாக்கியுள்ளது. இந்த பொங்கல் விடுமுறை சினிமா ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் – விஜய் என இரண்டு பெரிய நட்சத்திரங்களின் மோதலுடன் இரட்டை விருந்தாக அமையப்போகிறது.

Devi Ramu

Recent Posts

பகீர் கிளப்பும் ரவி மோகன் வீட்டு விவகாரம்… நள்ளிரவில் போலீசாருக்கு வந்த அந்த ஒரு போன் கால்… போலீஸ் விசாரணையில் வெளியான ஷாக் தகவல்….!

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…

13 minutes ago

திருச்செந்தூர் கோயிலில் திடீர் மாற்றம்…. ரூ.5,000-லிருந்து ரூ.30,000 ஆக உயர்ந்த கட்டணம்… பக்தர்கள் கடும் அதிர்ச்சி….!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…

24 minutes ago

“7 வயசுல ஆரம்பிச்ச நரகம்”…. சொந்த மகளை 10 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தை… மொபைலில் இருந்த ‘ChatGPT’ மூலம் சிறுமி செய்த காரியம்.. திகைத்துப்போன போலீசார்….!

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…

31 minutes ago

“அப்பா என்னை கூட்டிட்டு போயிடுப்பா”… 6 வயது சிறுவனின் கடைசி ஆசை…. கோவையில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…

39 minutes ago

“நாங்க தான் அனுப்பினோம்-னு சொல்றாங்களே”… “இனி எவனாவது தொட்டா சும்மா விடமாட்டோம்”… சட்டமன்றத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய முதலமைச்சர் விஜய்…!

தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…

46 minutes ago

BREAKING: மூத்த பத்திரிகையாளர் பெரியசாமி காலமானார்…. திரையுலகையும் தாண்டிய சோகம்…!

தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…

54 minutes ago