கோவை மாவட்டம் சூலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலதிபர் ஒருவர் நடத்திய கொலைவெறித் தாக்குதல் அப்பகுதியையே உலுக்கியுள்ளது. சூலூர் நாகமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 52 வயதான பிரேம் ஆனந்த் என்ற லாரி உரிமையாளர், ஏற்கனவே மூன்று திருமணங்கள் செய்தவர். முதல் மனைவி இறந்துவிட, இரண்டாவது மனைவி விவாகரத்து பெற்றும், மூன்றாவது மனைவி பிரிந்து சென்றும் விட்ட நிலையில், பிரேம் ஆனந்த் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த அன்பு எஸ்தர் என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
அன்பு எஸ்தர் தனது கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில், பிரேம் ஆனந்துடன் பழகி வந்துள்ளார். சமீபத்தில் எஸ்தர் அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது, அங்கு பணியாற்றிய திலீபன் என்பவருடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த பிரேம் ஆனந்த் கடும் ஆத்திரமடைந்து, ஏற்கனவே ஜனவரி மாதம் திலீபனையும் எஸ்தரையும் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்று சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளிவந்தார். சிறையிலிருந்து வந்த பிறகும் அவர்களது பழக்கம் தொடர்ந்ததால் ஆவேசத்தின் உச்சத்துக்கே சென்றார்.
கடந்த புதன்கிழமை அதிகாலை எஸ்தரின் வீட்டிற்குச் சென்ற பிரேம் ஆனந்த், அங்கு திலீபன் இருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்து அவரை கத்தியால் சரமாரியாகக் குத்தினார். இதில் திலீபன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தடுக்க வந்த எஸ்தரையும் தாக்கிய பிரேம் ஆனந்த், “சாகும்போதாவது ஒன்றாகச் சாகுவோம்” என்று கூறி சமையல் எரிவாயு சிலிண்டரைத் திறந்துவிட்டுத் தீ வைத்துள்ளார். இதில் ஏற்பட்ட வெடிப்பில் வீட்டின் ஜன்னல்கள் சிதறின; எஸ்தர் அதிர்ஷ்டவசமாக மற்றொரு அறைக்குள் தப்பி ஓடி உயிர் பிழைத்தார்.
இந்த தீ விபத்தில் பிரேம் ஆனந்த் 30 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து வந்த சூலூர் போலீசார் திலீபனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று திருமணங்கள் தோல்வியடைந்த விரக்தியில் இருந்த தொழிலதிபர், கள்ளக்காதல் மோகத்தால் கொலையாளியாக மாறியதுடன் தற்கொலைக்கும் முயன்ற இந்தச் சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள குருகுலத்தில் தங்கிப் படித்து வந்த 11 வயது சிறுவன் திவ்யான்ஷ் திவேதி, மிகக்…
திருமணம் முடிந்த முதலிரவு அன்று, தாய் தனது மருமகளுக்குப் பால் கொடுத்துவிட்டு "தூங்குங்கள்" என்று கூறிச் செல்ல முயன்றார். அப்போது…
தங்களது அன்புக்குரியவர்களின் மறைவுக்குப் பின், அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு சகோதரி செய்துள்ள விசித்திரமான காரியம் இணையத்தில் நெகிழ்ச்சியையும்…
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கங்கோத்ரி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக கோமியத்தைக் குடிக்க வேண்டும் என அந்த…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வினோத வீடியோவில், நண்டு ஒன்று பாம்பின் தலையை வேட்டையாடும் காட்சிகள் காண்போரை அதிரவைத்துள்ளன. …
டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர், அங்குள்ள உயர் அதிகாரிகளால் கட்டாய மதமாற்ற முயற்சிக்கும், தனிப்பட்ட ரீதியான…