திருமணமாகி 10 நாளில் வாந்தி எடுத்த மனைவி… “என்னை மன்னிச்சிடுங்க” அவர் தான் காரணம்… கணவன் எடுத்த முடிவால் அடுத்தடுத்து நடந்த விபரீதம்..!!!

Spread the love

சேலம் அழகாபுரத்தில் வசிப்பவர் சசி சேகர். 44 வயதான இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் இதற்கு முன்பாக சேலத்தில் உள்ள மற்றொரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்தபோது அங்கு பணியாற்றிய திருமணமாகாத இளம் பெண் ஒருவரோடு சசி சேகர் பேசி பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்திய நிலையில் அந்த பெண்ணோடு சசி சேகர் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் அம்மாபேட்டையை சேர்ந்த ஒரு வாலிபருடன் அந்த பெண்ணுக்கு திருமணம் முடிந்துள்ளது.

இதனையடுத்து திருமணமான 10 நாளில் அந்த பெண் வாந்தி எடுத்ததால் அதிர்ச்சி அடைந்த புது மாப்பிள்ளை மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் .அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். திருமணமான 10 நாளில் எப்படி இரண்டு மாத கர்ப்பம் என்று கேட்டுள்ளார். அப்போது கதறி அழுத அந்த இளம் பெண் என்னை மன்னித்து விடுங்கள் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார். மேலும் தன்னோடு வேலை பார்த்த ஒருவரோடு ஏற்பட்ட பழக்கம் குறித்த விவரத்தையும் அவரிடம் கண்ணீர் மல்க கூறி இருக்கிறார். இதனால் கருவை கலைத்து விட உதவி செய்த புது மாப்பிள்ளை சசி சேகரை தேடி சென்று உள்ளார் .

அப்போது அவருடன் தன்னுடைய நண்பர் கோபால் என்பவரையும் அழைத்து சென்றுள்ளார். சசி சேகரை  பிடித்து எச்சரித்து இரண்டு பேரும் கருவை கலைப்பதற்கு 80 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு உள்ளார்கள். மேலும் கொடுக்காவிட்டால் போலீசில் புகார் கொடுப்பதாகவும் கூறினார்கள். இதனால் பயந்து போன சசி சேகர் பணத்தை கொடுத்து உள்ளார். பிறகு தன்னுடைய மனைவிக்கு கருவை கலைத்துவிட்டு சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்கள். இதனை அடுத்து புது மாப்பிள்ளையுடன் சென்ற கோபால் என்பவர் சசிசேகரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.

தன்னோடு பிரபல ரவுடிகளான மோகன் என்ற பாஸ்புட் மோகன், உலகநாதன், பூமாலை ராஜன் ஆகிய மூன்று பேரை அழைத்துக்கொண்டு சசி  சேகரை சந்தித்து பத்து லட்சம் பணம் கேட்டு உள்ளார்கள். பணத்தை கொடுக்க விட்டால் அந்த பெண்ணோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவோம். பிறகு நீ ஜெயிலுக்கு சென்று விடுவாய் என்று மிரட்டி உள்ளார்கள். இதனால் பயந்து போன சசி சேகர் 9 லட்சம் பணம் கொடுத்துள்ளார் .பிறகு மீண்டும் 10 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டதால் பயந்து போன சசி சேகர் காவல் நிலையத்தில் சென்று தன்னை காப்பாற்றுமாறு புகார் கொடுத்துள்ளார். இதனை அடுத்து விசாரண நடத்திய காவல் துறையினர் அந்தப் பெண்ணின் கணவரின் நண்பரான கோபால், பாஸ்ட்புட் மோகன், பூமாலை ராஜன், உலகநாதன் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Soundarya

Recent Posts

“தண்ணீர் பிடிக்கச் சென்ற தாய்.. வீட்டின் உள்ளே புகுந்த காம மிருகம்… 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… நாசிக்கில் கொடூர சம்பவம்”…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில், மூன்று வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

3 minutes ago

ஏன் இந்த மோதல்…? ரயில்வே நடைமேடையில் மல்லுக்கட்டிய இருவர்…. தெறித்து ஓடிய பயணிகள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ரயில் நிலையத்தின் நடைமேடையில் பயணிகள் ரயிலில் ஏற முயன்றபோது, இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட திடீர் மோதல் பெரும் பரபரப்பை…

5 minutes ago

“பணத்தை வாங்கு.. தவெக-விற்கு ஓட்டு போடு”… சைலண்டாக விஜய் செஞ்ச சம்பவம்… தமிழக அரசியலில் தலைகீழ் மாற்றம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பல தசாப்தங்களாகத் தமிழக அரசியலைத் தங்களது…

9 minutes ago

“காமவெறியில் முடிந்த ரத்த பாசம்!… சொந்த பேத்தியையே சிதைத்துக் கொன்ற தாத்தா… திரிபுராவில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்”…!!!

திரிபுரா மாநிலம் சிபாஹிஜாலா மாவட்டத்தில் உள்ள சோனாமுரா பகுதியில், 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்…

12 minutes ago

“1500 கோடி சொத்து.. ஆட்டம் காணும் கோட்டைகள்”… மாமியார் பின்னடைவு.. மருமகன் முன்னிலை… மார்ட்டின் குடும்பத்தில் வெடிக்கிறதா வாரிசுப் போர்..?

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனமும் லால்குடி மற்றும்…

16 minutes ago

“ப்ளீஸ் விட்ருங்க…” மனைவியுடன் விறகு சேகரிக்க சென்ற நபர்… அடித்து உதைத்து அராஜகம் செய்த பாதுகாவலர்கள்… மனதை உலுக்கும் சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிங்க்ரோலியில் உள்ள நிலக்கரி சுரங்கப் பகுதியில், விறகு சேகரிக்கச் சென்ற பைகா பழங்குடியினத்தைச் சேர்ந்த அன்னே…

17 minutes ago