பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகிறா.ர் இன்று இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். இரவு 8:30 மணி அளவில் தூத்துக்குடியில் 451 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் 4800 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதனை முடித்துவிட்டு இரவு 9:40 மணிக்கு தனி விமானம் மூலமாக திருச்சி செல்கிறார். நாளை மதியம் 12 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்கிறார். அங்கு ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழா தமிழக அரசு சார்பாக நடக்கிறது. இந்த விழா ஐந்து நாட்கள் நடக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் .விழாவில் நான்காம் நாளான நாளை கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்கிறார். குறிப்பாக திருச்சி வரும் பிரதமர் மோடி இரண்டுக்கு மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. திருச்சி விமான நிலையத்தில் இன்று 10:30 மணி அளவில் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேச இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது மூத்த தலைவர்கள் கே பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி வேலுமணி ஆகியோரும் பிரதமரை சந்தித்து பேச இருப்பதாக தெரிகிறது.
மறுபக்கம் பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் ஏற்கனவே அனுமதி கேட்டு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதற்கு இதுவரை மோடியின் தரப்பில் இருந்து எந்த விதமான பதிலும் அளிக்கப்படவில்லை. அது மட்டும் இன்றி பிரதமர் மோடி சந்திக்கும் தலைவர்களின் பட்டியில் ஓபிஎஸ் இன் பெயர் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…