ஓபிஎஸ்-க்கு NO சொல்லிவிட்டு இபிஎஸ்-க்கு YES..? இன்று 10:30 மணிக்கு மோடியுடன் சந்திப்பு… குஷியில் எடப்பாடி, ஏமாற்றத்தில் பன்னீர்செல்வம்..!!

By Soundarya on ஆடி 26, 2025

Spread the love

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகிறா.ர் இன்று இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். இரவு 8:30 மணி அளவில் தூத்துக்குடியில் 451 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் 4800 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதனை முடித்துவிட்டு இரவு 9:40 மணிக்கு தனி விமானம் மூலமாக திருச்சி செல்கிறார். நாளை மதியம் 12 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்கிறார். அங்கு ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழா தமிழக அரசு சார்பாக நடக்கிறது. இந்த விழா ஐந்து நாட்கள் நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் .விழாவில் நான்காம் நாளான நாளை கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்கிறார்.  குறிப்பாக திருச்சி வரும் பிரதமர் மோடி இரண்டுக்கு மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. திருச்சி விமான நிலையத்தில் இன்று 10:30 மணி அளவில் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேச இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது மூத்த தலைவர்கள் கே பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி வேலுமணி ஆகியோரும் பிரதமரை சந்தித்து பேச இருப்பதாக தெரிகிறது.

   

மறுபக்கம் பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் ஏற்கனவே அனுமதி கேட்டு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதற்கு இதுவரை மோடியின் தரப்பில் இருந்து எந்த விதமான பதிலும் அளிக்கப்படவில்லை. அது மட்டும் இன்றி பிரதமர் மோடி சந்திக்கும் தலைவர்களின் பட்டியில் ஓபிஎஸ் இன் பெயர் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.