2001-ல் ரூ.50 லட்சம் கடனில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், இன்று ரூ.500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். இது மக்களின் பணம் என நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில் பாஜக தலைவர் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு பிரச்சாரம் மேற்கொண்டார் .அப்போது பேசிய அவர், கடனில் இருந்த அமைச்சர் ராதாகிருஷ்ணன் 500 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளார். அவர் மீது பல வழக்குகள் உள்ளது.
குறிப்பாக திமுகவுக்கு அவர் சென்ற பிறகுதான் இதனை சம்பாதித்துள்ளார். இதனால், வரும் தேர்தலில் ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும் என்றும், அவரை தோற்கடிப்பது மக்களின் கடமையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் அதிமுக பாஜகவிற்கு அடிமையாக இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார். திமுக அமைச்சர்கள் தான் அடிமைகளாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…