நாளுக்கு நாள் பெருகி வரும் தொழில்நுட்ப மற்றும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் காரணமாக, சைபர் மோசடி சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. சட்ட அமலாக்க அதிகாரிகள் அல்லது சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி ஆள்மாறாட்டம் செய்யும் மோசடியாளர்கள், ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் ‘டிஜிட்டல் கைது’ என்ற புதிய வகை மோசடி அதிகரித்து வருகிறது.
அவ்வகையில், பெங்களூரைச் சேர்ந்த 57 வயது பெண்மணி ஒருவர், ஆறு மாதங்களாக வீடியோ கண்காணிப்பில் வைக்கப்பட்டு, ₹33 கோடிக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளார். தொலைபேசியில் மிரட்டிய மோசடியாளர்கள், அப்பெண்ணின் வீட்டைக் கண்காணிப்பதாகவும், போலீஸைத் தொடர்புகொள்ளக் கூடாது என்றும் பயமுறுத்தினர்.
மகளின் திருமணம் நடக்கவிருந்த நிலையில், குடும்பத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் வந்துவிடுமோ என்ற பயத்தில், அப்பெண் அவர்கள் கூறியபடி 187 வங்கிப் பரிவர்த்தனைகளைச் செய்து, 33 கோடியை இழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மோசடியாளர்கள் கொடுத்த தொடர் மனஅழுத்தத்தின் காரணமாக அப்பெண் மிகவும் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…