ரூ.500 கோடி சொத்து சேர்த்து எப்படி..? அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்டணும்… நயினார் பரபரப்பு பேச்சு…!!

By Soundarya on கார்த்திகை 18, 2025

Spread the love

2001-ல் ரூ.50 லட்சம் கடனில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், இன்று ரூ.500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். இது மக்களின் பணம் என நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில்  பாஜக தலைவர் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.  அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு பிரச்சாரம் மேற்கொண்டார் .அப்போது பேசிய அவர், கடனில் இருந்த அமைச்சர் ராதாகிருஷ்ணன் 500 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளார். அவர் மீது பல வழக்குகள் உள்ளது.

குறிப்பாக திமுகவுக்கு அவர் சென்ற பிறகுதான் இதனை சம்பாதித்துள்ளார். இதனால், வரும் தேர்தலில் ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும் என்றும், அவரை தோற்கடிப்பது மக்களின் கடமையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும்   அதிமுக பாஜகவிற்கு அடிமையாக இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார். திமுக அமைச்சர்கள் தான் அடிமைகளாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.