தமிழக அரசின் திணை பேக்கரி இலவச பயிற்சி…! விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

By Devi Ramu on கார்த்திகை 18, 2025

Spread the love

புதிய தொழிலில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII) சார்பில், தினைப் பொருட்களைப் பயன்படுத்தி பேக்கரி தயாரிப்புகளை உருவாக்குவது குறித்துச் சிறப்பு இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள EDII நிறுவன முகவரியில் இந்த மூன்று நாள் பயிற்சி, வரும் நவம்பர் 25 முதல் 27, 2025 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

   

இந்தத் திட்டத்தில், கம்பு, ராகி, சாமை, சோளம் போன்ற சிறுதானியங்களைக் கொண்டு பலவகையான கேக்குகள், ரொட்டிகள், பிஸ்கட்டுகள் மற்றும் பிரவுனிகள் தயாரிக்கும் செய்முறைகள் கற்றுத் தரப்படும். மேலும், தொழில் தொடங்குவதற்கான அரசு மானியங்கள் மற்றும் கடன் உதவிகள் பற்றிய விரிவான வழிகாட்டுதலும் அளிக்கப்படும்.

   

18 வயதுக்கு மேற்பட்ட, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு அரசுச் சான்றிதழும் குறைந்த வாடகையில் விடுதி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 86681 02600 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.