“உடம்பு சரி இல்ல ஐயா… அதனால” பெற்ற மகனையே நரபலி கொடுத்த பெற்றோர்….? பதற வைக்கும் பகீர் சம்பவம்…!!

Spread the love

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பக்னு சோய் – பெலோ சோய் தம்பதி, ஏற்காடு காவேரிபீக் கிராமத்தில் உள்ள கராறா தனியார் தோட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக இரண்டு மகன்களுடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். மூன்றாவது மகனை ஜார்கண்டில் பெற்றோர் வீட்டில் விட்டுள்ளனர்.

நவம்பர் 4-ஆம் தேதி காலை 8:30 மணிக்கு தம்பதி வேலைக்குச் சென்றனர். வீட்டில் இருந்த அவர்களது கடைசி மகன் 4 வயது லபாடா சோய், தோட்டத்தில் தங்கியிருந்த மற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடன் 300 மீட்டர் தொலைவில் விளையாடினான்.

அப்போது மின் கம்பத்தில் இருந்து அறுந்து கிடந்த மின் கம்பியைத் தொட்டதால் மின்சாரம் தாக்கி சிறுவன்  இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் பெற்றோர் போலீஸுக்கு தகவல் கொடுக்காமல், உடலை வேலை இடத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் குழி தோண்டி ரகசியமாக புதைத்தனர்.

இதுகுறித்து கிராம மக்கள் செம்மநத்தம் கிராம நிர்வாக அலுவலர் வைஷ்ணவிக்கு தகவல் கொடுத்தனர். அவர் ஏற்காடு போலீஸில் புகார் அளித்தார். ஆய்வாளர் வாசுகி, வைஷ்ணவி, வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர்.

தோட்ட மேலாளர் சுனிலிடம் “குழந்தை இறப்புக்கு ஏன் போலீஸுக்கு தகவல் கொடுக்கவில்லை?” எனக் கேட்டபோது, “உடல்நிலை சரியில்லை” என மழுப்பலாக பதிலளித்தார். குழந்தை மரணம் நரபலி என்று ஏற்காட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.

சேலம் அரசு மருத்துவர் கோகுலரமணன் முன்னிலையில் உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடல் உறுப்புகள் சில ஆய்வுக்கு எடுக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஏற்காட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

தமிழக சட்டசபை மாற்றம்..? சென்னை ECR-க்கு மாறுகிறது..? முதல்வர் விஜய் போட்ட சூப்பர் பிளான்…!!

தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…

5 minutes ago

அதிகாலையிலேயே சோகம்…. கத்தார் எரிவாயு ஆலை விபத்து… தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!

கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…

18 minutes ago

“இனிமேல் அமைதியாக இருக்க முடியாது”… அவங்கள பற்றி எல்லாத்தையும் சொல்ல போறேன்… புதிய பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…

22 minutes ago

அடுத்த அதிரடி…. திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்… காலையிலேயே ஸ்டாலினுக்கு செம ஷாக்..!

அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…

27 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. இல்லத்தரசிகளுக்கு இன்று காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்… CM விஜய் வெளியிடப்போகும் அந்த அறிவிப்பு….!

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…

31 minutes ago

அடுத்த பரபரப்பு.. எம்.எல்.ஏ பதவி காலி?… மொத்த கோட்டையோடு தவெக-வுக்கு தாவும் விஜயபாஸ்கர்?… ஒரே போடாய் போட்ட செங்கோட்டையன்….!

அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…

36 minutes ago