2000 களின் தொடக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற சீரியல் மை டியர் பூதம். 90 கிட்ஸ்சுக்கு பிடித்த தொடராக இருந்த “மை டியர் பூதம் ” போன்ற தொடர்கள் ஒளிபரப்பான காலம் அன்றைய காலகட்ட 90ஸ் கிட்ஸ்களுக்கு பொற்காலம் என்றே சொல்லலாம். ஏனென்றால் அதன் பிறகு குழந்தைகளுக்காகப் பிரத்யேக சீரியல்கள் அதன் பின்னர் வருவதில்லை.
இந்த தொடரில் நடித்த நிவேதா தாமஸ் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கின்றார். ஆனால் இந்த சீரியலின் கதாநாயகனாக நடித்து தமிழகம் முழுவதும் பிரபலம் அபிலாஷ் அதன் பிறகு காணாமல் போனார். அவர் பெரிய அளவில் நடிப்பில் கவனம் செலுத்தவில்லையோ என்று கூட தோன்றியது.
ஆனால் இப்போது அவர் தமிழ் சினிமாவில் மீண்டும் நடிகராக களமிறங்கியுள்ளார். சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற குடும்பஸ்தன் படத்தில்தான் அவர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் நகைக்கடை உரிமையாளர் ஆன மாணிக்சந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தது சாட்சாத் மைடியர் பூதம் அபிலாஷ்தான்.
இப்போது அவர் படங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். அதே போல குடும்பஸ்தன் படத்திலும் பணியாற்றியுள்ளார். அப்போது மாணிக்சந்த் கதாபாத்திரத்துக்கு பொருத்தமான நடிகர்கள் கிடைக்காததால் இவரை நடிக்க வைக்கலாம் என படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கேற்றார் போல இவருக்கு வயதானவர் போல மேக்கப் போட்டு அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவைத்துள்ளனர்.
சமீபத்தில் அருணிகா யாதவ் என்ற பெண், ரயிலில் பயணம் செய்தபடியே தனது அலுவலக வேலைகளைத் தடையின்றி செய்வதற்காகப் பயன்படுத்திய சுவாரஸ்யமான…
மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகி இல்ல விழாவில் கலந்துகொண்ட சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், செய்தியாளர்களைச் சந்தித்து…
சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வைரலாகிய ஒரு வீடியோ, மும்பை புறநகர் ரயில் ஒன்றில் பெண்கள் மிகவும் ஆபத்தான முறையில் படிக்கட்டில்…
திமுக செயற்குழு கூட்டம் நிறைவடைந்த நிலையில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் கனிமொழிக்குக் கூடுதல் அதிகாரமிக்க பதவிகளான பொதுச்செயலாளர்…
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய துணை சபாநாயகர் ரவிசங்கர், ஆளும் திமுக அரசுக்கு எதிராகக்…
குருகிராமில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் புழு நெளிந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை…