Categories: சினிமா

80% வயிற்றை ஆபரேஷன்ல எடுத்துட்டாங்க… கண் கருப்பா மாறிடுச்சு… சின்னத்திரை நடிகர் நேத்ரனின் இறுதி நொடிகளை பகிர்ந்த மனைவி தீபா…

Spread the love

சின்னத்திரை தமிழ் தொலைக்காட்சி மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பணியாற்றியதன் மூலம் பிரபலமானவர் நடிகர் நேத்ரன். இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். சிங்க பெண்ணே, பொன்னி, மன்னன் மகள், மகாலட்சுமி போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர் நேத்ரன்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் பணியாற்றி வந்தவர் நேத்ரன். தொடர்கள் மட்டுமல்லாது விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் சீசன் 3, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை ஜோடி மற்றும் சூப்பர் குடும்பம் போன்ற ரியாலிட்டி ஷோக்கலிலும் தோன்றியிருக்கிறார். ஆக்டிவாக தொடரில் நடித்து வந்த நேத்ரன் எதிர்பாராத விதமாக கடந்த டிசம்பர் மாதம் புற்றுநோயால் உயிரிழந்தார். அதற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியாமல் இருந்தது. தற்போது அவரது மனைவி தீபா நேத்ரனின் இறுதி நொடிகளை பற்றி பகிர்ந்திருக்கிறார்.

தீபா கூறுகையில் என்னுடைய கணவர் நேத்ரனுக்கு வயிற்று புற்றுநோய் வந்துவிட்டது. அதனால் அவரால் சாப்பிட முடியாமல் இருந்தது. முதலில் ஆபரேஷன் செய்து 80 சதவீதம் வயிறு கட் பண்ணி எடுத்து விட்டார்கள். 20 சதவீதம் வயிறை வைத்து தான் கொஞ்சம் கொஞ்சமாக நீராகாரம் தான் சாப்பிட முடிந்தது. ஆனால் நாளுக்கு நாள் அவருக்கு வலி அதிகமாகவே இருந்தது.

ஆபரேஷன் பண்ணிய இடத்தில் தையல் பிரிந்து அடிக்கடி இன்பெக்ஷன் ஆனது. அதனால் அடுத்ததாக கல்லீரலும் பாதிப்படைந்து விட்டது. அவர் மிகவும் உடல் மெலிந்து எலும்பு கூடாக ஆகிவிட்டார். கீமோ பண்ணி நாங்கள் எவ்வளவோ காப்பாற்ற முயற்சி செய்தோம். ஆனாலும் உடம்பு முழுவதும் பரவிவிட்டது.

அவர் இறக்கும் தருவாயில் நாங்கள் அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்க்கும்போது அவர் உடம்பெல்லாம் கருப்பாக மாறிவிட்டது. அவரது கண் முக்கியமாக கருப்பாக மாறிவிட்டது. மூச்சு விட முடியாமல் சென்று வென்டிலேடரில் வைத்தார்கள். ஆனாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் மிகவும் வலியால் துடித்து கஷ்டப்பட்டு இறந்து போனார். இது போன்ற நோய் யாருக்கும் வர கூடாது என்று உருக்கத்துடன் அவரது மனைவி தீபா பகிர்ந்து இருக்கிறார்.

admin

Recent Posts

ரொம்ப ஆட்டம் போட்ட இப்படித்தான் ஆகும்…! போதையில் கார் மேல் ஏறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த ஷாக்… திட்டி தீர்க்கும் இணையவாசிகள்..!!

மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…

10 minutes ago

பதைபதைக்கும் வீடியோ..! மரத்தில் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு… உடலில் மிளகாய்ப் பொடி தூவி ரத்தம் சொட்டச் சொட்ட கொடூரம்.. பழைய பகையை தீர்க்க இப்படியொரு கொடூரமா??

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…

14 minutes ago

“அம்மா துடிதுடிக்க செத்ததை பார்த்தேன்” குழந்தையின் கண்முன்னே… தாயை கொன்று தூக்கிலிட்ட கொடூரம்… வரதட்சணைக்காக இப்படியா..? சிறுவனின் பகீர் வாக்குமூலம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…

17 minutes ago

“சீனாவுக்கு நான் தரும் கிப்ட்” அதிபர் ஷி ஜின்பிங் என்னைக் கட்டிப்பிடித்து வரவேற்பார்… ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் போட்ட ‘மாஸ்’ பதிவு..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…

30 minutes ago

“டேய் திரும்பிப் பாக்காம ஓடுங்கடா” மனிதர்களே தேவையில்லை… தானாகவே காட்டுப்பன்றிகளை விரட்டும் ரோபோ… வைரலாகும் வீடியோ இதோ..!!

போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…

37 minutes ago