அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) தாம் நிரந்தரமாகத் திறந்துவிடுவதால் சீனா மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த முக்கியமான கடல்வழிப் பாதை இனி ஒருபோதும் முடக்கப்படாது என்று உறுதியளித்துள்ள அவர், இது சீனாவுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகிற்கும் தாம் செய்யும் நன்மை என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், ஈரான் நாட்டுக்கு ஆயுதங்களை வழங்க மாட்டோம் என்று சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் தனது பதிவில் உரிமை கோரியுள்ளார். ஆனால், சீனா ஈரானுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கத் தயாராகி வருவதாகவும், அமெரிக்க ராணுவத் தளங்களைக் கண்டறிய ஈரான் சீன உளவு செயற்கைக்கோள்களைப் பயன்படுத்துவதாகவும் அண்மையில் வெளியான ஊடகச் செய்திகள் டிரம்பின் இந்த கூற்றுக்கு முரணாக உள்ளன. இருப்பினும், சீனா தரப்பில் ஈரானுக்கு எந்தவித ராணுவ ஆதரவும் வழங்கவில்லை என்று தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
எதிர்வரும் மே மாதம் தாம் பெய்ஜிங் செல்லும்போது, சீன அதிபர் ஷி ஜின்பிங் தன்னை ஒரு “பெரிய கட்டிப்பிடி வைத்தியம்” (big, fat hug) மூலம் வரவேற்பார் என்று டிரம்ப் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். தாங்கள் இருவரும் புத்திசாலித்தனமாகவும் இணக்கமாகவும் செயல்பட்டு வருவதாகவும், போரிடுவதை விட இதுவே சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார். அதே சமயம், தேவைப்பட்டால் மற்ற எவரையும் விட சிறப்பாகப் போரிடும் ஆற்றல் அமெரிக்காவிற்கு உண்டு என்பதையும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…