ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை வெளிக்காட்டும் வகையில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று, விமான நிறுவனத்திற்குப் பதிலாக அந்தத் தம்பதியினர் மீதே நெட்டிசன்களின் கடுமையான விமர்சனங்களைத் திருப்பியுள்ளது.
‘ரேமண்ட் மற்றும் ரமிசா என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கம் நடத்திவரும் பயணக் கிரியேட்டர்கள் ஜோடி வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவில், 6.8 அடி உயரமுள்ள அந்த நபர் விமானத்தின் குறுகிய கழிவறைக்குள் நுழைவதற்காகத் தோள்களை முடக்கி, உடலைச் சுருக்கி மிகவும் சிரமப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. உயரமான பயணிகள் விமானத்தில் எதிர்கொள்ளும் சவால்களை நகைச்சுவையாகக் காட்ட அவர்கள் முயன்றனர்.
https://www.instagram.com/reel/DfQBruyq0OK/?utm_source=ig_web_copy_link&vrfl=NTc4MTIwNjQ2YQ==
ஆனால், இந்த வீடியோ வெளியானதைக் கண்ட பலரும், “ஏர் இந்தியா நிறுவனம் விமானங்களைத் தயாரிப்பதில்லை; போயிங் அல்லது ஏர்பஸ் நிறுவனங்களே விமானங்களைத் தயாரிக்கின்றன. உலகெங்கிலும் உள்ள அனைத்து விமானங்களிலும் இதே போன்ற கழிவறை வடிவமைப்புதான் உள்ளது” என்று தம்பதியினரின் அறியாமையைக் கண்டித்தனர். மேலும் சிலர், விமான நிறுவனத்தைக் குறை கூறுவதை விட்டுவிட்டு வேறு விமானத்தில் பயணிக்கலாமே என்று சாடியதுடன், அந்த நபரின் உடல் பருமனையும் சுட்டிக்காட்டி விமர்சித்து வருவது தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…