விலை அதிகம்.. ஆனால் உணவில் புழுவா?!… காஸ்ட்லி உணவகங்களின் முகத்திரையைக் கிழித்த இளைஞர்… இணையத்தை உலுக்கும் வீடியோ…!!

Spread the love

குருகிராமில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் புழு நெளிந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருகிராமின் ஹொரைசன் சென்டரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘பால்’ பேக்கரி மற்றும் கஃபேக்கு உணவருந்தச் சென்ற சுலப் மாத்தூர் என்ற வாடிக்கையாளரின் உணவிலேயே இந்த புழு கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வாடிக்கையாளர்களிடையே பீதியை உண்டாக்கியுள்ளது.

சம்பவத்தன்று காலை சுமார் 11 மணியளவில் தனது நண்பர்களுடன் குறித்த உணவகத்திற்குச் சென்ற சுலப், அங்கு 6-க்கும் மேற்பட்ட உணவுகளை ஆர்டர் செய்துள்ளார். அதில் அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த சீசர் சாலட்டில் உயிருள்ள புழு ஒன்று ஊர்ந்து செல்வதைக் கண்டு அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்தப் புழுவின் வீடியோவை பதிவு செய்த அவர், வாடிக்கையாளர்கள் சாப்பிடும் உணவின் சுகாதாரத்தில் உணவகம் சமரசம் செய்துள்ளது மிகவும் கவலைக்குரியது எனத் தெரிவித்து இணையத்தில் பதிவேற்றினார். இந்த வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, பால் உணவக நிர்வாகம் வாடிக்கையாளரிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது. உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தில் தாங்கள் மிகுந்த கவனம் செலுத்துவதாகவும், இந்த எதிர்பாராத தவறுக்காக வருந்துவதாகவும் அவர்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் விளக்கமளித்தனர். இருப்பினும், இது வெறும் சம்பிரதாயத்துக்காக அனுப்பப்பட்ட மெசேஜ் என்றும், அவர்கள் இந்த விவகாரத்தை உண்மையில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் சுலப் குற்றம் சாட்டியுள்ளார். அதிக விலை கொடுத்து சாப்பிடும் இதுபோன்ற உயர்தர உணவகங்களில் நடக்கும் இந்த அலட்சியப் போக்கு நெட்டிசன்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Gayathri

Recent Posts

“சரத் பவாருக்கு ஓய்வு… சுப்ரியாவுக்கு மத்திய அமைச்சர் பதவி?”….. மோடி அடித்த ஒற்றை போன் கால்… பின்னணியில் மாபெரும் ‘டீல்’….!

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…

2 minutes ago

“தலையில்லாமல் நிர்வாணமாக கிடந்த உடல்…” தனியாக அழைத்து சென்ற சக ஊழியர்… வாலிபர் கொலையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரின் தலையைத் துண்டித்து மயானத்தில்…

8 minutes ago

அட கடவுளே… 8 மாசமா சம்பளம் இல்ல… அப்புறம் பிச்சை எடுக்காம என்ன பண்றது?… கையில் பிச்சை பாத்திரத்துடன்… வீதியில் இறங்கிய அரசு பெண் அதிகாரி… இணையத்தில் வைரல்…!!

பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…

20 minutes ago

“வீட்டில் மகளுடன் இருந்த தொழிலாளி…” தனியாக அழைத்து சென்று முதலாளி செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…

22 minutes ago

ஐயோ கொடுமையே… காதல் திருமணம் சோகத்தில் முடிந்த விபரீதம்… மனைவியை அடித்துக் கொன்று தப்பிய கணவனின் கொடூரம்… உ . பி – யில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…

23 minutes ago

ஏங்க எழுந்திரிங்க… நாம வீட்டுக்குப் போயிடலாம்… விபத்தில் இறந்த கணவனின் உடலைப் பிடித்து கதறிய மனைவி… திருவாரூரில் நடந்த சோகம்…!

திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…

36 minutes ago