“வீட்டில் மகளுடன் இருந்த தொழிலாளி…” தனியாக அழைத்து சென்று முதலாளி செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

Spread the love

பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் திருவேகப்புறாவைச் சேர்ந்த கிரண் (22), பெங்களூரு வடக்குப் பகுதியில் ஆனந்த்ராஜ் என்பவருக்குச் சொந்தமான உற்பத்தித் தொழிற்சாலையில் தனது சகோதரருடன் சேர்ந்து வேலை செய்து வந்தார். ஆனந்த்ராஜின் 19 வயது மகள் அருகில் உள்ள நகரில் படித்து வந்த நிலையில், விடுமுறைக்காக வீடு திரும்பியுள்ளார். அப்போது கிரணுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று காலை வீட்டைவிட்டுச் செல்வதுபோல் நாடகமாடிய ஆனந்த்ராஜும் அவரது மனைவியும் திடீரென வீடு திரும்பியபோது, கிரண் வீட்டிற்குள் இருப்பதைக் கண்டுள்ளனர். உடனே மகளைச் சொந்தக்காரர்களின் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, கிரணை மட்டும் வீட்டில் தனியே நிறுத்திய ஆனந்த்ராஜ் அவரைத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்து மயக்கமடைந்த கிரணை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தக் கொலை திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதாகக் கூறும் உறவினர்கள், கிரணின் சகோதரரை மட்டும் வேண்டுமென்றே டெலிவரி பணிக்காக உத்தரப் பிரதேசத்திற்கு அனுப்பிவிட்டு கொலையை அரங்கேற்றியதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். யெலஹங்கா காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து ஆனந்த்ராஜைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“ஆசையாக வளர்ந்த ஒரே மகள்…” அமெரிக்காவில் மாயமான மாணவி… கடற்கரை அருகே சிக்கிய செல்போன் சிக்னல்…! பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…

7 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்து விபத்தில் சிக்கிய சிறுமி… ஓட்டுனரை தள்ளிவிட்டு பிள்ளையை தூக்கிய தாய்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வைரல் வீடியோ…!!

குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…

14 minutes ago

“6 அடி 8 அங்குல உயரமான கணவர்…” ஏர் இந்தியா விமான கழிவறையில் படும் பாடு… கலாய்க்கும் நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…

26 minutes ago

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

58 minutes ago

“ஆண் என்பதால் வேலை கொடுக்கல…” ராபிடோ ஆட்டோ ஓட்டி கொண்டே கனவை அடைய போராடும் வாலிபர்… பயணியால் வெளிச்சத்திற்கு வந்த சோகம்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…

1 மணத்தியாலம் ago