தமிழ் சினிமாவில் வெறித்தனமான ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த நிலையில் ஆசை, காதல் கோட்டை, வாலி என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகரானார். அதன் பின்னர் தீனா படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறிய அவர் தொட்ரந்து மாஸ் மசாலா படங்களில் நடித்து வருகிறார்.
துணிவு படத்துக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. வழக்கமான மாஸ் மசாலா படமாக இல்லாமல் அஜித் அடக்கி வாசித்துள்ளதாக சிலர் சொன்னாலும் படம் சுவாரஸ்யமாக இல்லை என்றும் சொல்லப்பட்டு வருகின்றன.
படத்தின் சில காட்சிகள் 2022 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான Last seen alive என்ற படத்தின் காட்சிகளை நினைவூட்டது போல உள்ளதாக உள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஏற்கனவே Breakdown என்ற படத்தின் ரீமேக்தான் விடாமுயற்சி என்றும் சொல்லப்பட்டு அதனால் பல சிக்கல்கள் எழுந்தன.
இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் திரிஷாவின் கதாபாத்திரத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். படத்தில் அவர் அஜித்திடம் விவாகரத்துக் கோருவது போலவும், திருமணம் தாண்டி இன்னொருவருடன் உறவில் இருப்பது போலவும் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இப்போது த்ரிஷாவின் இந்த கதாபாத்திரத்தை மங்காத்தாவில் அவர் நடித்திருந்த கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு கருத்திட்டு வருகின்றனர். மங்காத்தா படத்தில் அஜித் காதலிப்பது போல நடித்து த்ரிஷாவை ஏமாற்றிவிடுவார். அதற்கு திட்டமிட்டு 13 ஆண்டுகள் கழித்து இப்போது த்ரிஷா பழிவாங்கிவிட்டதாக மீம்கள் எல்லாம் பகிரப்பட்டு வருகின்றன.
மேலும் த்ரிஷா நடித்த ‘96’ படத்தின் இரண்டாம் பாகம்தான் விடாமுயற்சி என்றும் சிலர் கூறி வருகின்றனர். Re unionல் ராமை சந்தித்து வந்த த்ரிஷா இப்போது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற முடிவு செய்துள்ளார் என்றும் ரசிகர்கள் ஜாலியாகக் கலாய்த்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில், பள்ளிவாசல் அருகே பல ஆண்டுகளாக அமர்ந்து பிச்சை எடுத்து வந்த முதிய பெண்மணி ஒருவர்…
'மர மனித நோய்' என்று பரவலாக அறியப்படும் எபிடெர்மோடிஸ்பிளாசியா வெருசிஃபார்மிஸ் என்பது மனிதர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு மிக அரிதான…
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர்…
சங்கரெட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த சுரேகா என்ற இளம்பெண், தனது காதல் திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதிக்காத…
ரயிலில் பயணித்த நபர் ஒருவரிடம், ரயில்வே உணவக ஊழியர் அதிகக் கட்டணம் வசூலித்து அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
நாகலாந்து மற்றும் அசாம் மாநிலங்களில் வீசிய வீரியமிக்க வெள்ளத்தில் சிக்கி, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 53 வயதான 'ஜோய்மோதி' என்ற பெண்…