“இறந்துவிட்டதாக நாடகம்.. 31 ஆண்டு மர்மம் உடைந்தது”… யூடியூபராக வலம் வந்த கொலைக் குற்றவாளி! சிக்கியது எப்படி?… காசியாபாத்தில் நடந்த சினிமா பாணி சம்பவம்….!!!

Spread the love

சமூக வலைதளங்களில் ‘முன்னாள் முஸ்லிம்’ எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, மதம் மற்றும் தீவிரவாதம் குறித்துப் பேசிப் புகழ்பெற்ற யூடியூபர் சலீம் வாஸ்திக் என்பவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் காசியாபாத்தில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட நிலையில், அவர் மீதான விசாரணையில் 31 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு அதிர்ச்சிகரமான கொலை வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர் 1995-ல் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரின் 13 வயது மகனைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1995-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி, டெல்லி சிமெண்ட் வியாபாரியின் மகன் சந்தீப் பன்சால் கடத்தப்பட்டார். சிறுவனை விடுவிக்க 30,000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்காப்புக் கலை ஆசிரியராகப் பணியாற்றி வந்த சலீம் கான் (தற்போதைய சலீம் வாஸ்திக்) மற்றும் அவரது நண்பர் அனில் ஆகியோர் சிறுவனைக் கடத்திக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். சிறுவனின் உடல் சாக்கடையிலிருந்து மீட்கப்பட்ட நிலையில், 1997-ல் நீதிமன்றம் சலீமுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால், 2000-ஆம் ஆண்டு இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த சலீம், அதன்பின் தலைமறைவாகித் தன்னைத் தானே இறந்துவிட்டதாக அறிவித்துக் கொண்டார்.

அதன்பின்னர் சலீம் வாஸ்திக் என்ற புதிய பெயரில் காசியாபாத்தில் துணிக்கடை நடத்தி வந்த அவர், யூடியூபராகவும் சமூக ஆர்வலராகவும் உருவெடுத்தார். அவரது இந்த ‘மாற்று வாழ்க்கை’ பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவரை ஈர்த்ததால், அவரது கதையைத் திரைப்படமாக எடுக்க 15 லட்சம் ரூபாய் முன்பணமும் வழங்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் அவர் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சித் தாக்குதல் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. அவரது கைரேகைகள் மற்றும் பழைய ஆவணங்களை ஒப்பிட்டுப் பார்த்த போலீசாருக்கு, அவர் 31 ஆண்டுகளுக்கு முன்பு தப்பிய கொலைக் குற்றவாளி என்பது தெரியவந்தது.

சலீம் மத நிந்தனை செய்ததாகக் கூறி ஜீஷான் மற்றும் குல்பாம் என்ற சகோதரர்கள் அவரைக் கத்தியால் குத்தினர். இதில் படுகாயமடைந்த சலீம் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது பழைய கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், சலீமைத் தாக்கிய அந்த இரு சகோதரர்களும் போலீசாருடன் நடந்த தனித்தனி என்கவுண்டர்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு யூடியூபரின் புகழுக்கு பின்னால் மறைந்திருந்த 30 ஆண்டு காலக் கொலை மர்மம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

Muthu Mani

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

7 மணத்தியாலங்கள் ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

8 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

8 மணத்தியாலங்கள் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

8 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

8 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

8 மணத்தியாலங்கள் ago