நள்ளிரவில் போனில் பேசிய மனைவி.. மொபைலைத் தர மறுத்ததால் ஸ்கார்ஃப்பால் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்… மாடியில் பிள்ளைகள் தூங்கியபோது நடந்த கொடூரம்..!!

Spread the love

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மானேசர் பகுதியில், நள்ளிரவில் மனைவி மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து ஆத்திரமடைந்த கணவன், அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகாரைச் சேர்ந்த நரேந்திர சிங் (37) மற்றும் அவரது மனைவி காஜல் தேவி (36) ஆகிய இருவரும் தங்களது நான்கு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நரேந்திர சிங்கிற்கு, தனது மனைவியின் நடத்தையின் மீது நீண்ட நாட்களாகவே சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவத்தன்று நள்ளிரவில் நரேந்திர சிங் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பியபோது, மனைவி காஜல் தேவி யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நரேந்திர சிங், யாரிடம் பேசுகிறாய் எனக் கேட்டு அவரது மொபைல் போனைத் தருமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், காஜல் போனைத் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபத்தின் உச்சத்துக்கே சென்ற நரேந்திர சிங், வீட்டில் இருந்த ஸ்கார்ஃப் (துப்பட்டா) ஒன்றை எடுத்து காஜலின் கழுத்தை இறுக்கிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

இந்தக் கொடூர சம்பவம் நடந்த சமயத்தில், இவர்களது நான்கு குழந்தைகளும் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்ததால், அவர்களுக்கு கீழே நடந்த இந்த கொடூரம் குறித்து எதுவும் தெரியவில்லை. மனைவியைக் கொலை செய்த பின்னர் நரேந்திர சிங் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். மறுநாள் காலையில் காஜல் தேவியின் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட மானேசர் போலீசார், தலைமறைவாக இருந்த கணவர் நரேந்திர சிங்கை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

பகீர்… கல்லூரி மாணவிக்கு டார்ச்சர்… தட்டிக்கேட்ட தந்தை மீது… வீடு புகுந்து இளைஞர்கள் வெறித்தாக்குதல்… கோவையில் பரபரப்பு…!!

கோவை வழுக்கம்பாறையில் கல்லூரி மாணவியின் தந்தை மீது இளைஞர்கள் கும்பல் வீடு புகுந்து நடத்திய தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும்…

49 seconds ago

“நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்: வெள்ள நீரில் பாய்ந்த மின்சாரம்… மடிந்து விழுந்த கல்லூரி மாணவிகள்… பதறவைக்கும் நேரடி வீடியோ…!!”

நவி மும்பையின் நெரூள் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீரில் மின்சாரம் பாய்ந்ததில், இரண்டு கல்லூரி மாணவிகள் படுகாயமடைந்து…

7 minutes ago

“வேலுமணியைத் தொடர்ந்து அடுத்த விக்கெட் அவுட்?”… அதிமுகவை காலி செய்யும் ‘தவெக’.. அலறும் எடப்பாடி படை….!

அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சிப் பூசல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிருப்தியாளர்களின் எண்ணிக்கை…

16 minutes ago

FLASH NEWS: வங்கக்கடலில் புயல் சின்னம்…. 40-50 கிமீ வேகத்தில்…. தமிழகத்தில் பொளந்துக்கட்டப்போகும் கனமழை…. வந்தது அலெர்ட்….!

வங்கக்கடலில் நாளை மறுதினம் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன்…

25 minutes ago

“திமுகவுடன் ரகசிய கூட்டணி?”… EPS-க்கு எதிராக போர்க்கொடி.. பரபரப்பு கடிதம்… அதிமுக முக்கிய புள்ளிகள் உடைத்த ரகசியம்…!

அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

49 minutes ago

குடும்பத்தலைவிகளுக்கு ஷாக்…. மகளிர் உரிமைத்தொகையில் இருந்து 19 லட்சம் பேர் நீக்கம்… அதிகாரிகளுக்கு பறந்த ரகசிய உத்தரவு…!

மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கத்தின் போது, 60 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளை அதிலிருந்து நீக்கி, முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ்…

53 minutes ago