பகீர்… கல்லூரி மாணவிக்கு டார்ச்சர்… தட்டிக்கேட்ட தந்தை மீது… வீடு புகுந்து இளைஞர்கள் வெறித்தாக்குதல்… கோவையில் பரபரப்பு…!!

Spread the love

கோவை வழுக்கம்பாறையில் கல்லூரி மாணவியின் தந்தை மீது இளைஞர்கள் கும்பல் வீடு புகுந்து நடத்திய தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவக்குமார் என்பவரின் மகள் கல்லூரியில் படித்து வரும் நிலையில், அவரது அடையாள அட்டையை ஒரு கும்பல் பறித்துக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து மாணவியின் தந்தை சிவக்குமார் அந்த இளைஞர்களிடம் தட்டிக்கேட்டதால், ஆத்திரமடைந்த கும்பல் அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளது.

விசாரணையில், சூர்யா என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிவக்குமாரின் வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியது தெரியவந்துள்ளது. மேலும், அவர்கள் சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை கொடூரமாக தாக்கியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தின்போது, அந்த கும்பல் வீட்டிலிருந்த ரூ. 1.5 லட்சம் பணம் மற்றும் நகைகளையும் திருடிச் சென்றுள்ளதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடூர சம்பவம் குறித்து இதுவரை காவல்துறை தரப்பில் எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என மாணவியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக புகார் அளிப்பதற்காக அவர்கள் போத்தனூர் மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்றபோது, காவல்துறையினர் அவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைத்துள்ளனர். அதோடு மட்டுமின்றி, இந்தச் சம்பவம் தங்கள் எல்லைக்குட்பட்டது அல்ல என்று கூறி, மதுக்கரை காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு அலைக்கழித்ததாகவும் சிவக்குமார் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Swetha

Recent Posts

தேவர் ஜெயந்தி கிப்ட்.. சிக்குனாங்க ஆதவ் அர்ஜுனா.. தவெக அரசியலில் திடீர் ஹீரோவான சிடிஆர் நிர்மல்குமார்…. இத யாருமே எதிர்பார்க்கலையே..!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் தமிழக முதல்வர் விஜய் நேரில் கலந்துகொள்ளாதது, தவெக கட்சியில் புதிய அரசியல் திருப்பங்களை…

6 minutes ago

“அன்று பஸ்… இன்று கனிமவளம்…” அதிரடி ரீல்ஸ்களால் சர்ச்சையில் சிக்கிய தவெக எம்.எல்.ஏ… பின்னணியில் ‘அந்த’ பிளான்…? திடீர் சலசலப்பு…!!

விருதுநகர் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ பி.செல்வம், கனிமவள ஆய்வு தொடர்பாகப் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோ தமிழக…

8 minutes ago

“அந்தப் பதவி எனக்கு வேணும்”…. ஸ்டாலினுக்கு டைரக்ட் செக் வைக்கும் அனிதா ராதாகிருஷ்ணன்…. ஷாக்கில் அறிவாலயம்…. தென்மாவட்டத்தில் அடுத்த பூகம்பம்….!

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் அதிரடி அரசியலுக்குத் திரும்பும் முயற்சியில் இறங்கியுள்ளார்.…

15 minutes ago

ஆடியோவில் இருப்பது யார்?… போன் காலில் வெடித்த விவாதம்… நடுங்க வைக்கும் மிரட்டல்… சிக்கிய முக்கிய புள்ளி?… அம்பலமான உண்மை என்ன?…!!

குஷிநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சேகர் சுக்லா, அப்பகுதியில் இந்துத்துவ சித்தாந்தம் மற்றும் தீவிர வலதுசாரி கொள்கைகளை வெளிப்படையாக ஆதரிக்கும் நபராக…

18 minutes ago

“பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் ரூ.70,000 கோடி ஊழல்”…. முதலமைச்சருக்கு அன்புமணி கொடுத்த ஷாக் எச்சரிக்கை…. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாப்பதிலும், அங்கு நடைபெறும் முறைகேடுகளைத் தடுப்பதிலும் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

19 minutes ago

“சார், நான் கிளீன் பண்ணத்தான் வந்தேன்… தானாவே கதவு மூடிக்கிச்சு”…. ஏடிஎம்-க்குள் மாட்டிக்கொண்டு திருடன் கொடுத்த ஷாக் பதில்….!

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம் மையத்தில் நள்ளிரவில் புகுந்து திருட முயன்ற…

25 minutes ago