உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்த சின்கு நிஷாத் என்பவருக்கு ராம் ஆசிஷ் (32) என்ற மகனும், நீலம் (19) என்ற மகளும் இருந்த நிலையில் நிஷாந்த் விவசாயம் செய்து குடும்பத்தை பார்த்து வந்துள்ளார். அப்போது அம் மாநில அரசு நான்கு வழி சாலை அமைக்க விவசாய நிலத்தை எடுத்துக் கொண்டதால் அதற்கான இழப்பீடு தொகையாக 5 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. இந்த பணத்தை வைத்து மகளுக்கு திருமணம் செய்து விடலாம் என்று நிஷாந்த் பணத்தை தன்னுடைய வங்கி கணக்கில் சேமித்து வைத்திருந்தார்.
இதனை அறிந்து கொண்ட மகன் ராம் ஆசிஷ் பணத்தைக் கேட்டு தந்தையிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்து உள்ளார். அதற்கு இந்தப் பணம் மகளின் திருமணத்திற்கு மட்டும் தான் வேறு எதற்காகவும் யாரும் பணத்தை எடுக்க வேண்டாம் என்று நிஷாந்த் தெரிவித்துள்ளார். இதனால் தந்தை மற்றும் மகனுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் அண்ணனுக்கு தங்கை மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணன் தங்கையை தவிர மற்ற அனைவரும் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலுக்கு சென்றுள்ளனர்.
வீட்டில் தங்கை மட்டும் தனியாக இருந்த சமயத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ராம் தனது தங்க இருந்தால் தானே அவரது திருமணத்திற்கு பணத்தை செலவு செய்வார்கள் என்று நினைத்து அவரை கொலை செய்ய முடிவு செய்தார். தங்கையின் அழைக்கச் சென்று அவரை சரமாரியாக தாக்கி கால்களை உடைத்து கழுத்தை நெறித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பிறகு உடலை வீட்டிலிருந்த சாக்கு முட்டையில் கட்டி இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் வீசிவிட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளார்.
விடிந்ததும் கரும்பு தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற விவசாயிகள் மூட்டையில் இருந்த ரத்த கரையை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்ததில் சொந்த அண்ணனை தங்கையை கொலை செய்து உடலை கொண்டு வந்து வீசியது தெரிய வந்தது. தற்போது அவரை கைது செய்துள்ள போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் மகாந்தேஷ் நகர் பிரதான சாலையில், லவ் டேல் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்த…
மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை மாளவிகா சர்மா, தான் அறிமுகமாகும் 'கலிஃபா' என்ற மலையாளப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காகச் சமீபத்தில்…
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சிகாரா பகுதியில் அமைந்துள்ள சஞ்சய் சிட்டி மாடல் பள்ளியில் பெண் ஒருவர் கொடூரமாக…
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே அனல் பறக்கும் வார்த்தைப் போர்…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கணவன் மற்றும் 5 வயது மகன் ஆகிய இருவர் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து…
பெங்களூருவின் சிக்கா அடுகோடி பகுதியில், குடியிருப்பின் மூன்றாம் மாடி அமைப்பில் உள்ள கிரில்லில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன்…