தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகளால் சுமார் 1.15 கோடி பெண்கள் மட்டுமே பயனடைந்து வந்தனர். மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத குடும்பங்களின் அதிருப்தியை குறைக்கும் நோக்கத்தில், அரசு தற்போது பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக புதிதாக சுமார் 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.
இந்த விண்ணப்பதாரர்களில் வருமான வரி செலுத்தும் குடும்பங்களை சேர்ந்தவர்களை தவிர்த்து மற்ற தகுதியுள்ள பெண்களுக்கு உரிமை தொகை வழங்குவதற்கு நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்ட மன்றத்தில் அறிவித்தபடி இந்த புதிய பயனாளிகளுக்கு டிசம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் ஜூலை 15 முதல் தற்போது வரை முப்பது லட்சத்திற்கும் அதிகமானோர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர். புதிய பயனாளர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட உள்ள நிலையில் திட்டத்திற்கு தகுதியானவர்கள் குறித்து அறிவிப்பு இதுவரை வெளியாகாமல் உள்ளது. தற்போது தகுதியானவர்கள் விவரம் வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதிக்குள் வெளியாகும் என்ற உதயநிதி மீண்டும் உறுதி அளித்துள்ளார். இந்தச் செய்தி குடும்ப தலைவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் ஒருவர், தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் கட்சியில் இணைந்ததாக சமூக ஊடகங்களிலும் செய்தி…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான ச. ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற மறுநாளே, அக்கட்சியின் உள்விவகாரங்கள் தொடர்பான ஆடியோ…
முதலமைச்சர் விஜய் இன்று (மே 20) சென்னை தலைமைச் செயலகத்திற்கு நேரில் சென்று, பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப்…
தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவை விரிவாக்கம் குறித்த எதிர்பார்ப்புகள் தற்பொழுது அரசியல் களத்தில் அதிகரித்துள்ளன. முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில்…
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, அதிமுகவின் அதிருப்தி குழுவைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணி…
அதிமுகவில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிந்தைய அரசியல் சூழல், பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் தலைமை மீதும், அதன்…