முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, அதிமுகவின் அதிருப்தி குழுவைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சரவையில் இடம் மறுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் தங்களை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என இத்தரப்பு வலியுறுத்திய போதிலும், தற்போதைய சூழலில் அது கட்சியின் பிம்பத்தைப் பாதிக்கும் என தவெக தலைமை கருதுகிறது. எனவே, அவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, கட்சியின் விசில் சின்னத்தில் இடைத்தேர்தலில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்குவதாக முதலமைச்சர் விஜய் நிபந்தனை விதித்துள்ளதாகத் தெரிகிறது.
அரசியல் உத்தி வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி தரப்பிலிருந்து, “மக்கள் தமிழ்நாட்டில் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்பார்த்தே தவெக-விற்கு வாக்களித்துள்ளனர்; எனவே மாற்று அரசியல் என்ற மக்களின் நம்பிக்கையை எந்த சூழ்நிலையிலும் பொய்யாக்கிவிடக் கூடாது” என்ற அறிவுரை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தவெக-வின் கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகளான விசிக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள், அதிமுக அதிருப்தியாளர்களை அமைச்சரவையில் சேர்த்தால் தங்களது ஆதரவை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என எச்சரித்ததும் இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. இதனால், தேர்தல் சின்னம் மற்றும் கொள்கை ரீதியான அங்கீகாரம் பெற்ற பின்னரே அவர்களுக்கு மந்திரி பதவி என்ற தவெக-வின் திட்டவட்டமான முடிவு அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயபுரத்தில், கடந்த 8 வருடங்களாக காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலனின் திருமணத்தை இளம்பெண் ஒருவர் நேரில் சென்று தடுத்து நிறுத்தி…
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, காவல்துறையில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 15 ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை அதிரடியாக…
சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளை உளவுத்துறையில் நியமித்ததற்கு, அந்தத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றும் போலீஸாரிடையே ஏற்கனவே அதிருப்திக் குரல்கள் எழுந்திருந்தன.…
முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500…
பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள குராலி பகுதியில், நான்கு வயது சிறுமி ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…
மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் ஒருவர், தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் கட்சியில் இணைந்ததாக சமூக ஊடகங்களிலும் செய்தி…