ஹைதராபாத் அருகே கள்ளத்தொடர்புக்கு தடையாக இருந்ததாகக் கருதி, பெற்ற தாயே தனது 6 வயது மகளைத் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்துக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்வால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மச்சா பொல்லாரம் பகுதியில் அரங்கேறியுள்ள இந்த கொடூர செயல், உள்ளூர் மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையின்படி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ரேகா என்ற பெண்ணிற்கு, கடந்த 2020ஆம் ஆண்டு ராஜு என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ரேகாவுக்கு, தன்விகா என்ற 6 வயது மகள் இருந்துள்ளார். இதற்கிடையில், ரேகாவுக்கும் அவரது வீட்டிற்கு அருகில் வசித்த 20 வயதான சாய்குமார் என்ற இளைஞருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் திருமணம் செய்து வாழ ஆசைப்பட்ட நிலையில், ரேகாவின் திருமண வாழ்க்கையும் அவரது மகளும் இவர்களது காதலுக்குப் பெரும் தடையாக இருப்பதாகக் கருதியுள்ளனர்.
இந்த தடையை நீக்க முடிவு செய்த காதலர்கள் இருவருமாகச் சேர்ந்து, சிறுமி தன்விகாவைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். முதலில் சிறுமியை ஏரியில் தள்ளிவிட நினைத்தவர்கள், பின்னர் அந்த திட்டத்தை மாற்றி வீட்டின் மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி, கடந்த மே 16ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், “விளையாடலாம்” என்று ஆசையாகக் கூறி தன்விகாவை மாடிக்கு அழைத்துச் சென்ற ரேகா, அவளைத் தண்ணீர் தொட்டிக்குள் தள்ளி மூழ்கடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கொலைக்கு பின், குழந்தை காணவில்லை என்று நாடகமாடி அக்கம் பக்கத்தினருடன் தேடுவது போல ரேகா நடித்துள்ளார். எனினும், போலீசாரின் தீவிர விசாரணையில் ரேகாவின் முன்னுக்குப் பின் முரணான பதில்கள் சந்தேகத்தை ஏற்படுத்தவே, அவர் தனது காதலன் சாய்குமாரின் தூண்டுதலின் பேரில் குற்றத்தைச் செய்ததை ஒப்புக்கொண்டார். தற்போது சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், ரேகா மற்றும் சாய்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தல் மோடிற்குள் நுழைந்துள்ள நிலையில், கோட்டை வட்டாரங்களில் அமைச்சரவை மாற்றம் குறித்த விவாதங்கள் அனல்…
தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவிற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக, முற்றிலும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் 215…
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள 6 முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் சொத்து விவரங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்', தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுகவில் உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கை…
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். கடந்த…