தமிழக பெண்களுக்கு ஷாக் நியூஸ்…. ரேஷன் கார்டில் தவெக அரசு செய்யப்போகும் அதிரடி மாற்றம்… இனி ‘இவர்களுக்கு’ மகளிர் உரிமைத் தொகை கிடையாது….?

Spread the love

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து தற்போது பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசால் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. தேர்தல் களத்தில் தவெக தனது வாக்குறுதியாக, இத்திட்டத்தை ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ எனப் பெயர் மாற்றி, மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்திருந்தது. ஆனால், புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முதற்கட்டமாக ஆயிரம் ரூபாய் மட்டுமே பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதால், தேர்தல் வாக்குறுதி எப்போது நிறைவேறும் என்ற பலத்த எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் பெண்கள் மத்தியில் நிலவி வந்தது.

இந்தச் சூழ்நிலையில், கடந்த ஆட்சியில் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி வசதி படைத்தவர்கள் மற்றும் பல வீடுகள் வைத்திருப்போர் இத்திட்டத்தின் கீழ் பலன் பெற்று வந்தது தற்போதைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஒரே பெயரில் பலமுறை விண்ணப்பித்த குளறுபடிகள் மற்றும் ஒரே வீட்டில் இரண்டு ரேஷன் கார்டுகளைப் பயன்படுத்தி இருவர் பணம் வாங்கிய முறைகேடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால், தகுதியற்றவர்களைப் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, வறுமையில் வாடும் உண்மையான தகுதியுடைய ஏழைப் பெண்களைக் கூடுதலாகச் சேர்க்கும் விரிவான கணக்கெடுப்புப் பணிகளைத் தவெக அரசு தற்போது தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது.

இந்நிலையில், பெண்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்குப் பதிலளிக்கும் விதமாக, மகளிர் உரிமைத் தொகை விரைவில் ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்படும் என்று தவெக அமைச்சர் ஜெகதீஸ்வரி மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான அனைத்து வழிமுறைகளும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், முறைகேடுகள் அனைத்தும் முழுமையாகச் சரிசெய்யப்பட்ட பின்னர் இந்த உயர்த்தப்பட்ட தொகை பெண்களின் கணக்குகளுக்கு நேரடியாகச் சென்றடையும் என்றும் உறுதியளித்துள்ளார். அதுவரை பொதுமக்கள் சற்றுப் பொறுமை காக்க வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Nanthini

Recent Posts

“சினிமா வசனங்களால் அரசியல் நடத்த முடியாது…!” – தவெக அரசுக்கு ஆதரவாக… திமுகவை வெளுத்து வாங்கிய கார்த்தி சிதம்பரம் அதிரடி பேட்டி…!!

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசுக்கு நிர்வாகத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளக் கால…

2 minutes ago

“ரூ.100 கோடி தர்றோம்… “ஏழை என்பதால் இப்படியா செய்வீர்கள்?”… கதறிய தவெக எம்.எல்.ஏ சரவணன்… கொந்தளிக்கும் தொண்டர்கள்… தமிழக அடுத்த அடுத்த ஆக்ஷன் ரெடி…!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிராக, அடுத்தடுத்து குதிரை பேரம்…

2 minutes ago

த.வெ.க ஆட்சிக்கு கம்யூனிஸ்ட் ஆதரவு தொடரும்…! – பெ. சண்முகம் அதிரடி பேட்டி… தமிழக அரசியலில் பரபரப்பு…!!

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமிழக அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு…

22 minutes ago

BREAKING: மேலும் 5 MLA-க்கள் ராஜினாமா…! தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!!

அதிமுகவில் மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய…

35 minutes ago

“தவெக அமைச்சரவையில் மாற்றம்”…. ஜூனியர்களுக்கு கல்தா?… விஜய் கையில் எடுத்த ‘ஆபரேஷன் சீனியர்ஸ்’…. பதறவைக்கும் கோட்டை வட்டார ரகசியங்கள்….!

தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தல் மோடிற்குள் நுழைந்துள்ள நிலையில், கோட்டை வட்டாரங்களில் அமைச்சரவை மாற்றம் குறித்த விவாதங்கள் அனல்…

45 minutes ago

“வரலாற்றில் முதல்முறை… சிபாரிசு, பணம் இல்லாமல் நடந்த 215 அதிகாரிகள் டிரான்ஸ்பர்”…. தமிழக பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றம்….!

தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவிற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக, முற்றிலும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் 215…

53 minutes ago