ஓசூர் அருகே கெலமங்கலத்தை அடுத்த சின்னட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான சுரேஷ் என்பவருடைய மனைவி பாரதி (26). சுரேஷ் அந்த பகுதியில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வரும் நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகின்றது. தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. மேலும் அந்த ஆண் குழந்தையும் சமீபத்தில் தான் பிறந்துள்ளது. ஆனால் பாரதிக்கும் எதிர் வீட்டை சேர்ந்த சுமித்ரா என்ற 20 வயது பெண்ணுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் உறவு இருந்துள்ளது. பாரதிக்கு மூன்றாவது குழந்தையான துருவன் பிறந்த பிறகு சுமித்ராவுக்கும் பாரதிக்கும் இடையே ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதில் தொந்தரவு இருந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் சுரேஷ் வீட்டுக்கு வந்த போது குழந்தை மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்துள்ளது. இது குறித்து மனைவியிடம் கேட்டதற்கு பால் கொடுத்து தூங்க வைத்தேன். இருமல் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். உடனே சுரேஷ் பதறி அடித்துக் கொண்டு குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனே தகவல் அறிந்து விரைந்த போலீசார் சுரேஷிடம் விசாரணை நடத்தியதில் இயற்கையாக தான் குழந்தை இறந்தது என நினைத்து உடற்கூறு ஆய்வு தேவையில்லை என்று போலீசாரிடம் சுரேஷ் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் பெற்றோரிடம் ஒப்படைத்த நிலையில் விவசாய தோட்டத்தில் குழந்தையின் உடல் புதைக்கப்பட்டது.
பிறகு வீட்டுக்கு சென்ற சுரேஷ் பாரதியிடம் மற்றொரு செல்போன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சோதனை செய்தார். அந்த போனில் பாரதியும் சுமித்ராவும் ஓரினச்சேர்க்கையில் இருப்பது போன்ற படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி பாரதியிடம் கேட்டபோது சுமித்ராவும் தானும் உல்லாசமாக இருக்கும் போது அடிக்கடி குழந்தை அழுது தொந்தரவு செய்ததால் குழந்தையை கொன்று விடும்படி சுமித்ரா கூறியதாகவும் அதன் பேரில் குழந்தையை வாயை பொத்தி கொன்று இறந்த உடலை படம் எடுத்து சுமித்ராவுக்கு whatsapp மெசேஜ் அனுப்பி உள்ளதையும் ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் பற்றி சுரேஷ் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாரதி மற்றும் சுமித்ரா இருவரையும் கைது செய்தனர். இந்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
உணவுப் பொருட்கள் தயாரிப்பில் கால்களால் மாவை மிதித்துப் பிசையும் அதிர்ச்சிகரமான காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி…
தமிழக வெற்றிக் கழகத்தில் மேலும் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இணையத் தயாராக இருப்பதாக தவெக நிர்வாகி செங்கோட்டையன் பேசிய பேச்சு,…
ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள அஞ்சையா நகரில் அமைந்திருந்த 7 மாடி கட்டிடம் ஒன்றை ஹைட்ரா நிர்வாகம் இடித்துத் தள்ளியுள்ளது. அருகில்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளில் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு…
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், எதிர்பாராத ஒரு நபர் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார். லா ஜொல்லா பகுதியில்…
சென்னைக்கு அருகிலுள்ள பரந்தூர் பகுதியில் 2-வது புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு…