சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் தங்கியிருந்த கும்பல்களை சிஎம்டிஏ அதிகாரிகள் விரட்டியடித்தனர். பயணிகளிடம் வழிப்பறி, செல்போன் திருட்டு, வளாகம் முழுவதும் அசுத்தம் செய்வது போன்ற பிரச்சினைகள் காரணமாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இரவு பகல் பார்க்காமல் பயணிகள் கூட்டம் நிரம்பியிருக்கும். குறிப்பாக வெளியூரில் இருந்து வரும் பயணிகள் சென்னை அல்லது புறநகருக்கு செல்ல சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொள்வது வழக்கம்.
ஆனால் இதைப் பயன்படுத்தி கூட்டமாக தஞ்சமடையும் மர்ம நபர்கள் வழிப்பறி, செல்போன் திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன. இதனால் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியது. 24 மணி நேரமும் தங்கியிருப்பவர்கள் வளாகத்தை அசுத்தமாக்கினர். அழுக்கு துணி மூட்டைகள் போட்டு இடையூறு செய்தனர். இயற்கை உபாதைகளை அங்கேயே கழிப்பதால் சுகாதாரம் பாதிக்கப்பட்டது.
இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். தஞ்சமடைந்தவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதை ஏற்று சிஎம்டிஏ அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். பயணிகள் அல்லாத வெளிநபர்களை வெளியேற்றினர். அசுத்தமான இடங்களில் தண்ணீர் ஊற்றி, பிளீச்சிங் பவுடர் தூவி சுத்தம் செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவில் திங்கட்கிழமை…
கர்நாடக மாநிலம் சிமோகாவைச் சேர்ந்த வாணி (22) என்ற இளம் பெண், பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள அகரா ஏரியில்…
2004-ஆம் ஆண்டில் ஈரானைச் சேர்ந்த அமனே பஹ்ராமி என்ற இளம் பொறியியல் பட்டதாரி, மஜித் மொவாஹெடி என்ற தனது சக…
சத்தார்பூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண், காசியாபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்.…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள காஜுவாக்கா பகுதியில், போக்குவரத்துத் துறை பெண் ஆய்வாளர் பார்வதி என்பவரின் வாகன ஓட்டுநர்,…
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா பகுதியில், 40 வயதான ராஜேஷ் என்பவரை அவரது மனைவி விமலா கத்தியால் பலமுறை குத்திக் கொடூரமாகக்…