பஸ் ஸ்டாண்டா…? இல்ல சந்தையா…? 24 மணி நேரமும் இடையூறு… மூட்டை முடிச்சுடன் தங்கியிருந்த கும்பல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

By Devi Ramu on கார்த்திகை 7, 2025

Spread the love

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் தங்கியிருந்த கும்பல்களை சிஎம்டிஏ அதிகாரிகள் விரட்டியடித்தனர். பயணிகளிடம் வழிப்பறி, செல்போன் திருட்டு, வளாகம் முழுவதும் அசுத்தம் செய்வது போன்ற பிரச்சினைகள் காரணமாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இரவு பகல் பார்க்காமல் பயணிகள் கூட்டம் நிரம்பியிருக்கும். குறிப்பாக வெளியூரில் இருந்து வரும் பயணிகள் சென்னை அல்லது புறநகருக்கு செல்ல சிறிது நேரம்  ஓய்வெடுத்துக்கொள்வது வழக்கம்.

   

ஆனால் இதைப் பயன்படுத்தி கூட்டமாக தஞ்சமடையும் மர்ம நபர்கள் வழிப்பறி, செல்போன் திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன. இதனால் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியது. 24 மணி நேரமும் தங்கியிருப்பவர்கள் வளாகத்தை அசுத்தமாக்கினர். அழுக்கு துணி மூட்டைகள் போட்டு இடையூறு செய்தனர். இயற்கை உபாதைகளை அங்கேயே கழிப்பதால் சுகாதாரம் பாதிக்கப்பட்டது.

   

இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். தஞ்சமடைந்தவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதை ஏற்று சிஎம்டிஏ அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். பயணிகள் அல்லாத வெளிநபர்களை வெளியேற்றினர். அசுத்தமான இடங்களில் தண்ணீர் ஊற்றி, பிளீச்சிங் பவுடர் தூவி சுத்தம் செய்தனர்.