ஜெர்மன் நாட்டின் ஒரு மருத்துவமனையில் ஆண் செவிலியராக 2020 ஆம் வருடம் பணியில் சேர்ந்த ஒரு நபர் ஒருவர் தன்னுடைய பணிக் காலத்தில் நோயாளிகளை பராமரிப்பதற்கு பதிலாக அவர்களை ஊசி போட்டு கொலை செய்த சம்பவத்திற்கு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் 2023 முதல் டிசம்பர் 2024 வரை நடந்துள்ளது. அப்போது இதுபோல பத்து நோயாளிகளை அவர் கொலை செய்துள்ளார். 27 பேரை கொலை செய்யவும் முயற்ச்சியும் எடுத்துள்ளார். இரவு நேர பணியின் போது பணி சுமை கூடுதலாக இருக்கிறது என்று உணர்ந்த அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இது தொடர்பாக வழக்கு விசாரணை வந்த நிலையில் அதில் 15 வருடங்களுக்கு குறையாமல் வெளியே வர முடியாதபடிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் உயிரிழந்தவரின் உடல்களை வெளியே எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் மீண்டும் அவருக்கு எதிராக விசாரணை நடக்கும் என்று கூறப்படுகிறது . இதேபோல 2019 இல் நீல்ஸ் ஹொஜெல் என்ற ஆண் செவிலியர் வேலை செய்த போது 85 நோயாளிகளை கொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானார் .1999 ஆம் வருடம் முதல் 2005 ஆம் வருடம் வரை நோயாளிகளுக்கு அதிக டோஸ் மருந்துகளை கொடுத்ததில் பலர் உயிரிழந்தார்கள். இந்நிலையில் ஜெர்மனியின் நவீன வரலாற்றில் கொடூர கொலைகாரன் இவர்தான் என்று நம்பப்படுகிறது.
